இத்தொகுப்பில் கடந்த பதினைந்து வருடங்களாக நான் எழுதிய குறுநாவல்கள் உள்ளன. ‘நாவல்’ எனும் என் நூலில் குறுநாவல் வடிவை, ‘நாவலுக்கு உரிய அகச்சிக்கலையும் சிறுகதைக்கு உரிய கூர்மையையும் அடைந்த இலக்கிய வடிவம்’ என்று நான் வரையறை செய்திருந்தேன். நல்ல குறுநாவலில் சிறுகதைக்கு உரிய இறுதி முடிச்சும் சிறப்புற நிகழ்ந்திருக்கும்.



