Payanakthai / பயணக்கதை
-
₹480
- SKU: KCP015
- ISBN: 9789380240855
- Author: Yuvan Chandrasekar
- Language: Tamil
- Pages: 384
- Availability: In Stock
சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் மிகத் தேர்ந்த கதை சொல்லி யுவன் சந்திரசேகர்.
அதிதீவிரமான படைப்பும் சுவாரசியமாக எழுதப்பட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு
அவரது புனைகதைகள். யுவன் சந்திரசேகரின் ஆறாவது நாவலான 'பயணக் கதை’ அவருடைய நாவல்களிலேயே உச்சபட்ச
வாசிப்பு சுகத்தை உள்ளடக்கியிருக்கிறது.
மூன்று நண்பர்கள் மேற்கொள்ளும் பயணத்தின் கதையாகத் தொடங்கும் நாவல் மூவரும்
சொல்லும் தனித்தனிக் கதைகளின் பயணங்களாக வாசக மனதில் விரிகிறது. மூன்று பயணக்
கதைகளும் சந்திக்கும் புள்ளியில் அவை ஒரே கதையாகவும் குவிகின்றன. கிருஷ்ணன்
சொல்லும் கதையும் இஸ்மாயில் சொல்லும் கதையும் சுகவனம் சொல்லும் கதையும் மூன்றாக
இருந்தாலும் ஒன்றுக்கொன்று பின்னப்பட்டவை. ஒருவர் சொல்லும் கதையிலிருந்து கிளை
பிரியும் இன்னொரு கதை, அதிலிருந்து
விலகிச் செல்லும் மற்றொரு கதை, வேறொரு
கதையிலிருந்து இன்னொரு கதைக்குள் வந்து சேரும் பிறிதொரு கதை என்று விரியும் நாவல்
காலத்தைப் பகுக்கிறது. களங்களைப் புதிது புதிதாக உருவாக்குகிறது.









