Ulagin Miga Neenda Kazhivarai / உலகின் மிக நீண்ட கழிவறை
-
₹260
- SKU: NV0004
- ISBN: 9788193373392
- Author: Akaramuthalvan
- Language: Tamil
- Pages: 192
- Availability: In Stock
அகரமுதல்வனின் சிறுகதைகளும் குறுநாவல்களும் போருக்குப் பிந்தைய எழுத்துக்களின்
தன்மைகளைக் கொண்டவையே. ஏற்கெனவே வெளிவந்திருக்கும் 'இரண்டாம் லெப்ரினன்ட்', 'முஸ்தபாவை சுட்டுக் கொன்ற ஓரிரவு', 'பான் கி மூனின் றுவாண்டா' ஆகிய தொகுதிகளில் காணப்படும் கதைகள் போர்ச்
சூழலின் உள்ளும் புறமுமாய் உள்ளவற்றையே சித்தரித்திருந்தன.
இவரின் எழுத்துக்கள் சபிக்கப்பட்ட ஒரு தலைமுறையின் குமுறல்கள். ஆத்திரங்கள்.
நீதியும் அறமும் பேசும் உலகை நோக்கி எள்ளலுடன் உமிழும் எச்சில் துளிகள். சராசரி
இளைஞனுக்குரிய இயல்பான வாழ்வு மறுக்கப்பட்டு ஒவ்வொரு நொடியும் போரின் மூர்க்கக்
கரங்களில் சிதறுண்டு உயிர் தப்பிய ஒருவனின் துயர்மிகு வரிகளையே இக் கதைகளில் நாம்
வாசிக்க முடிகிறது.
இவரின் குரல் நம் நீதியை நோக்கி கேள்வி எழுப்புகிறது. இதுகாறும் நாம் போதித்த
அறம் குறித்தும் அதன் வலிமை குறித்தும் சந்தேகம் கொள்கிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கணியன் பூங்குன்றனின் வாக்கை அதன்
பொருளைப் பற்றி நம்மிடம் கேட்டு நிற்கிறது.
தலைகுனிந்து பேசாமலிருப்பதைத் தவிர நம்மால் என்ன பதில் சொல்ல முடியும்?
- எம்.கோபாலகிருஷ்ணன்




