புதுமைப்பித்தன், பிரமிள், மா. அரங்கநாதன், அபி, தேவதச்சன் எனத் தொடரும் தமிழ் இலக்கியவழிச் சிந்தனை மரபின் முக்கியமான கண்ணி நகுலன். மனித இருப்பின் ஆதார அம்சமாகத் தோல்வியைப் பார்த்த எழுத்துக் கலைஞன் அவர். அவரது நூற்றாண்டை முன்னிட்டு அவரது படைப்புகளை மதிப்பிடும் தொகை நூல் ‘அருவம் உருவம்’. இதுவரை தொகுக்கப்படாத நகுலனின் சிறுகதைகள், நகுலன் எழுதிய ஆங்கிலச் சிறுகதை மற்றும் கவிதைகளின் மொழியாக்கம், நகுலனின் சித்திரங்கள், புகைப்படங்கள், கடிதங்கள், நகுலனின் பன்முகப் பங்களிப்பை மதிப்பிடும் கட்டுரைகள் என நகுலனைப் புரிந்துகொள்வதற்கான முழுமையான ஆவணம் இது. புதுமைப்பித்தன், பிரமிள், மா.அரங்கநாதன், அபி, தேவதச்சன் எனத் தொடரும் தமிழ் இலக்கியவழிச் சிந்தனை மரபின் முக்கியமான கண்ணியாக நகுலன் இருக்கிறார். இருப்பு மீதான சார்பும், இருப்பு மீதான பூதாகரமான பிடிமானமும், இருப்பு தொடர்பிலான பிரமாண்டமான அகந்தையும் பெருகியிருக்கும் இந்தக் காலகட்டத்தில், இன்மையைத் தனித்தவொரு வசீகர இருப்பாகச் சுட்டிக்காட்டிய நகுலன் மீதும் அவரது படைப்புகள் மீதும் கவனம் செலுத்துவது ஒரு விழுமியத்தைத் தக்கவைப்பதும்கூட.




