Nunveli Kirahanangal / நுண்வெளி கிரகணங்கள்



    • ₹360

    • ₹400
  • SKU: TAM023
  • Author: S.Veanugopal
  • Language: Tamil
  • Pages: 440
  • Availability: In Stock
Publication Tamilini Su.Venugopal

இலக்கியம் என்பது மனித அகத்தில் அடைந்துபோய் விட்டிருக்கும் கீழ்மை, மாசு. கெடுதல் முதலியவற்றைத் தயவு தாட்சண்யமின்றி வெளிப்படுத்தி, மறுக்க இயலாத சுவனத்தில் கொண்டுவந்து உணர்வில் நிறுத்தி, அதனால், மனித உள்ளத்தைத் தூய்மையுறச் செய்யும் ஒரு மார்க்கம் என்னும் பொருள்பட 'Catharsis' என்று அரிஸ்டாடில் கூறும் இயக்கத்தை க.வேணுகோபாலில் முழுமையாகக் காணலாம். t

சாதாரணமாக இதுவரையில் ராமாயணம் படித்திருக்கிறாயா, பாரதம் படித்திருக்கிறாயா இந்தக் காவியம், அந்தக் காவியம், ஐம்பெரு. ஐஞ்சிறு... என்றெல்லாம் சொல்வார்கள். அதாவது ஒருவர் நன்கு கற்றதற்கு. தமிழ் இலக்கியத்தில் அடையாளமாக இனிமேல் அதற்குப் பதில், ஏன் அதற்கெல்லாம் மேலாக சு.வேணுகோபால் படித்திருக்கிறாயா' என்று கேட்கலாம் போல் இருக்கிறது. சு.வேணுகோபாலைப் படிக்காமல் நம் காலத்துத் தமிழ் இலக்கியம் படித்திருப்பதாக ஒருவர் சொன்னால் அவருடைய நவீன தமிழிலக்கியப் படிப்பு மூளிதான் என்று சொல்வேன். காரணம் சு.வேணுகோபாலுடைய இலக்கியப் படைப்பு என்பது வாழ்வு என்னும் முடிவற்ற மூலக்கருவிலிருந்து முகச்சாயம் கூடப் பூசாமல் உருவெடுத்து வந்து நம்மைச் சந்திக்கும் சுய கெளரவம் மிக்க எழுத்துகள்.

உண்மையும், உணர்ச்சிகளின் வேதனையும், உள்ளத்தில் அருளும். வாழ்வில் விதியும். மனித அறிவின் எல்லைகளும் ஒன்றுற முயங்கும் கணத்தில் கூடு பொறித்த உயிரான எழுத்துகளாய் அவை நம்மை நோக்கி விழிக்கின்றன. அந்த யதார்த்தத்தின் பசுமை நம் நினைவிலும் படர்கிறது. அன்றாட வாழ்க்கையின் தன்மையைப் புதுப்பித்தது போன்ற ஒரு நிம்மதி படிப்பின் பிற்றை நிலையாய் நாம் உணரக் கிடைக்கிறது.

 

 

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up