Kallaa Pizhai / கல்லாப் பிழை
-
₹100
- SKU: TAM006
- ISBN: 9788187643470
- Author: K.Mohanarangan
- Language: Tamil
- Pages: 90
- Availability: In Stock
எழுத்தறிவித்தல்
முன் நடந்தவர்கள் பதித்த தடத்தில் எவரெவரோ
ஏற்றிவைத்த
விளக்குகளின்
வெளிச்சத்தில்தான்
இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன்
இருப்பினும்
இதுகாறு மெனக்கு வழியிடையே காலையிடறும் சிறு
கல்லையெடுத்து
தூரப் போடத் தோன்றியதில்லை
அணையவிருக்குமொரு திரியைத் தூண்டி
துளிபோல
எண்ணெய்விடவேண்டுமென்ற
எண்ணம் எழுந்ததில்லை
எந்த ஒளி பிறகென்
எழுத்துகளில் வந்தமரும்?
எனது
விழைவெல்லாம்
வேறெதுவுமில்லை
எள்முனையளவும் பிழையின்றி
இழைத்திழைத்து
இச் சொற்களை
பளிங்காக்கிப்
பார்வைக்கு வைத்திடல் வேண்டும் உற்றுப் பொருள்
காண முனைவோர் தம் முகம் பலிக்க.










