Agni Nathi / அக்னி நதி
-
₹255
- SKU: NBT008
- ISBN: 9788123721903
- Translator: Sowri
- Author: Qurratulain Hyder
- Language: Tamil
- Pages: 396
- Availability: Out Of Stock
செல்வி குர் அதுல்ஐன் ஹைதர், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த
மதிப்பு மிக்க இஸ்லாமியக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர். அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில்
பயின்று ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். இளம் பிராயத்திலேயே நாவல் எழுதத்
தொடங்கியவர். இவரது எழுத்தாற்றலும் படைப்புத் திறனும் உருது நாவல் இலக்கியத்துறைக்கு
சிறந்த, புதிய பாணியையும் திசை நோக்கையும் அளித்துள்ளது. தலைசிறந்த முன்னணி நாவலாசிரியர்களின்
வரிசையில் இவர் இடம் பெற்றிருக்கிறார். செல்வி ஹைதர் சில ஆண்டுகள் இங்கிலாந்தில் ‘டெய்லி
டெலிகிராஃப்' இதழின் நிருபராகப் பணிபுரிந்திருக்கிறார். பிறகு அங்கேயே பி.பி.சி. வானொலி
நிறுவனத்தில் உருது மொழித்துறையில் பணியாற்றினார். 1961இல் இந்தியாவுக்குத் திரும்பியபின்
'இம்பிரின்ட்' உள்ளிட்ட சில பத்திரிகைகளில் பணியாற்றினார்.
உருது மொழியில் வெளிவந்துள்ள இவரது இலக்கியப் படைப்புகளில்
ஆறுநாவல்கள், மூன்று சிறுகதைத் தொகுதிகள், சில நிகழ்ச்சிச் சித்திரங்கள், தரமான பல
மொழிபெயர்ப்புகள் குறிப்பிடத்தக்கவை.










