Agni Saatchi / அக்னி சாட்சி
-
₹100
- SKU: SA0011
- ISBN: 9788126005864
- Author: Lalithambiga Andharjanam
- Language: Tamil
- Pages: 130
- Availability: In Stock
லலிதாம்பிகா அந்தர்ஜனம் எழுதிய இந்த நாவல் –
அக்கினி சாட்சி 1977ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றது.
நம்பூதிரிப் பெண்களின் அவல நிலையை அப்பட்டமாக நன்கு படம்பிடித்துக் காட்டுகிறது
இப்புதினம் இந்நூலில் நனவோடை உத்தியையும், கவிதை திறம்படக்
தளும்பும் நடையையும் கையாண்டுள்ளார் இதன் ஆசிரியை.
லலிதாம்பிகா அந்தர்ஜனம் (1902-1987) நம்பூதிரி சமூகத்தின் புகழ்மிக்க படைப்பாளிகளில் ஒருவர். பல
பரிசுகள் பெற்றவர். பல சிறுகதைகள்
எழுதியுள்ள இந்நூலாசிரியை கேரள சாகித்திய
அகாதெமியின் துணைத் தலைவராகப் பணி ஆற்றியுள்ளார்.
இந்நூலை அழகுத் தமிழில் மொழிபெயர்த்துள்ள சிற்பி
பாலசுப்பிரமணியம் அவர்கள் சிறந்த கவிஞர். பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்
துறைத் தலைவர். கவித்துவம் நிறைந்த வாழ்க்கைச் சித்திரிப்பு, புதிய உருவம், புதிய நடை, போலித்தனம் மற்றும் படாடோபமற்ற விவரிப்பு இவையே இவரது
கோட்பாடுகள் எனலாம். இவரது தமிழ் மொழிபெயர்ப்பான இந்நூல், தமிழ் வாசகர்களை ஆட்கொள்ளும்
என்றால் மிகையாகாது.








