தமது முதல் நூலையே செவ்வியல் பிரதியாக படைத்து முத்திரை பதிக்கக் கூடியவர் சிலரே. இவான் கார்த்திக் காட்டும் சாளரத்தின் வழியே நாம் காணும் உலகம் புதிய ஒன்றல்ல. ஆனால் சொல்முறை மூலம் 'பவதுக்கத்’தில் உழலும் ஒவ்வொரும் உயிரையும் அணுக்கமாக உணரச் செய்யும் மாயம் நிகழ்ந்துள்ளது. காலடியில் நழுவும் உலகை, வாழ்வெனும் பெருவலியை ஓவியமென தீட்டிக் காட்டும் கலை வடிவம் கைகூடியிருக்கிறது.






