Gora / கோரா
-
₹350
- SKU: SA0026
- ISBN: 9788126044658
- Author: K.chellappan
- Language: Tamil
- Pages: 710
- Availability: In Stock
கோரா : இரவீந்திரநாத்தாகூரின் உலகப் பிரசித்தி பெற்ற படைப்புகளில் ஒன்றாகும்.
நாடு, சாதி, மதம், ஆண்-பெண் உறவுகள் மற்றும் முற்போக்கு - பிற்போக்குச் சிந்தனைகள் என
வாழ்க்கையின் அடிப்படை அடையாளச் சின்னங்களை அலசி, ஆராய்ந்து, வெளிச்சம் போட்டுக்காட்டி நம்மைச் சிந்திக்கவைக்கும்
ஒரு மகத்தான நாவல் கோரா. இந்நூல் முக்கர்ஜியின் ஆங்கில மொழிபெயர்ப்பின்
தமிழாக்கமாகும்.
தாகூர் : இந்தியத் துணைக்கண்டத்தின் மிகச்சிறந்த படைப்பாளியாகப் போற்றப்படும்
இவர், “கீதாஞ்சலி” எனும் வங்க
காவியத்திற்காக 1913ஆம் ஆண்டு நோபெல்
பரிசு பெற்றவர். இலக்கியம், அரசியல், கலை, விழுமியம் மற்றும் பல்வேறு படைப்புகளை வாழ்நாள் முழுவதும் படைத்த இவர்
விஸ்வபாரதி எனும் மிகப்பெரிய கலை பல்கலைக்கழகத்தை நிறுவியவர்.
சுஜித்முக்கர்ஜி : 20ஆம் நூற்றாண்டின்
தலைசிறந்த இந்திய எழுத்தாளர்களில் ஒருவரான இவர் கோரா நாவலை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்துள்ளார். இவர் இலக்கியம் குறித்து 18 நூல்களையும் 8 மொழிபெயர்ப்புகளையும் படைத்தவர்.
கா. செல்லப்பன் : பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையிலிருந்து ஓய்வு
பெற்ற இவர் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்புகளையும்,
ஒப்பாய்வு மற்றும்
இலக்கிய விமர்சனம் குறித்த கட்டுரைகள் மற்றும் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார்.
இவர் தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது உள்பட பல விருதுகளை பெற்றவர்.


