Thistha Nathikaraiyin Kathai / திஸ்தா நதிக்கரையின் கதை
-
₹650
- SKU: SA0004
- Translator: P Banumathi
- Author: Debesh Roy
- Language: Tamil
- Pages: 1260
- Availability: In Stock
தேபேஷ் ராய் வங்க தேசத்தில் (பங்களா தேஷ் ) பங்களா மாவட்டத்தில் பாக்மாரா
கிராமத்தில் 1936-ஆம் ஆண்டு
பிறந்தார். வடக்கு வங்காளத்தில் ஜல்பாய் குடியில் ஆனந்த சந்திர கல்லூரியில்
விரிவுரையாளராகவும் (1959-1974), சமூகவியல்கள்
ஆய்வு மையத்தில் ஆராய்ச்சியாளராகவும் (1975-1996) பணியாற்றினார். உத்தர வங்க பத்திரிகை, நேபாளி அதாதமி ஜர்னல், பரிச்சயா ஆகிய வங்கப் பத்திரிகைகளில்
ஆசிரியராகப் பணியாற்றினார். புவால்கா விருது, சாகித்திய அகாதெமி விருது, தபதி முகோபாத்யாயா விருது முதலிய விருதுகளைப்
பெற்றுள்ளார்.
"திஸ்தா நதிக்கரையின் கதை' (திஸ்தா பாரேர் பிருத்தாந்தோ) 1990ஆம் ஆண்டு வங்க மொழியில் சிறந்த புதினத்திற்காக
சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றது. இந்நூல் வடக்கு வங்காள மக்களின்
பிரச்சினைகள், போராட்டங்கள்,
அவர்கள் வாழ்க்கை முறை
ஆகியவற்றைப் பற்றிக் கூறும் வட்டார நாவலாகும்.இப்புதினம் வடக்கு வங்காளக்
கிளைமொழியான 'ராஜ்பங்ஷி'
மொழியில் எழுதப்பட்டுள்ளது.
மொழிபெயர்ப்பாளர் பி. பானுமதி தற்சமயம் கல்கத்தாப் பல்கலைக்கழகத்தில்
தமிழ்த்துறையில் பேராசிரியை யாகப் பணியாற்றி வருகிறார். வங்க மொழியிலிருந்து பல
புதினங்களையும் சிறுகதைகளையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் இவர். வங்க மொழி
நாடகமான ‘பாக்கி இதிஹாஸ்' - எனும் நூலின்
தமிழ்ப் பெயர்ப்பான ‘மீதிச் சரித்திரம்' என்னும் நூலுக்கு 1995-ஆம் ஆண்டு சிறந்த
மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றார். தற்சமயம் துருவன் மகன்,
சரத் சந்திரர் சிறுகதைகள்
ஆகிய இரு நூல்களை சாகித்திய அகாதெமிக்காக மொழிபெயர்த்துள்ளார்






