Vidiyal Mugam / விடியல் முகம்
-
₹365
- SKU: SA0019
- ISBN: 9788126029785
- Translator: S.Sankaranarayanan
- Author: Mulkraj Anand
- Language: Tamil
- Pages: 840
- Availability: Out Of Stock
இந்திய ஆங்கில இலக்கிய மும்மூர்த்திகளில் ஒருவராக ராஜாராவ், ஆர்.கே. * நாராயன் ஆகியோருடன்
கொண்டாடப்படுகிறார் முல்க் ராஜ் ஆனந்த் (1905 2004). பஞ்சாபி, இந்தி சொல்வழக்குகளை ஆங்கிலத்தில் அறிமுகம்
செய்தது அவரது சிறப்பு. 1924ல் பஞ்சாப்
பல்கலைக்கழகத்தில் ஒரு ஆனர்ஸ் பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ் மற்றும் லண்டன்
பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பை அவர் தொடர்ந்தார். 1929ல் முனைவர் பட்டம் பெற்றபின் ஜெனிவாவில் 1945 வரை விரிவுரையாளர் பணி. உலகப்போர் சமயத்தில்
லண்டன் பி.பி.சி.யில் செய்திப்படப் பிரிவில் வர்ணனையாளராகவும் பணிபுரிந்தவர்.
1951ல் தன் வாழ்க்கை அனுபவங்கள் சார்ந்து ஏழு
நாவல்களைத் தொடராக எழுதி வெளியிடத் திட்டமிட்டார். அதில் இரண்டாவதாக எழுதி
வெளியிட்ட நாவல் ‘மார்னிங் ஃபேஸ்’, சாகித்திய
அகாதெமி விருது பெற்றது. தமது பள்ளிப் பருவத்து அனுபவங்களை, சுதந்திரக் கனல் தன்னுள் மெல்லக் கிளர்ந்தெழுவதை,
தீண்டாமை போன்ற சமூகச்
சாபக்கேடுகளை அகற்றும் உத்வேகம் தன்னுள் மெல்ல உருவோங்குவதை யெல்லாம் விவரித்துச்
சொல்கிறார் இந்த நாவலில்.
மொழிபெயர்ப்பாளர் எஸ். ஷங்கரநாராயணன் எண்பதுகளின் இலக்கியவாதியாக கவனம்
பெறுகிறார். ஏறத்தாழ அறுபத்தியைந்து நூல்களின் ஆசிரியர். அவற்றில் பத்து நூல்கள்
நவீன இலக்கியப் பயில்நூல்களாக பல்வேறு தமிழ்ப் பல்கலைக்கழங்களில், தன்னாட்சிக் கல்லூரிகளில் அங்கீகாரம் பெற்றன.
உலகச் சிறுகதைகளின் தமிழ்ப் பெயர்ப்புகளாக கனவுச் சந்தை, வேற்றூர் வானம் என்ற இரு நூல்கள் வெளியிட்டார்.
மூன்றாவது தொகுப்பு 'மேற்குச் சாளரம்'
அச்சில் உள்ளது.




