Kumaragurubaran Kavithaikal / குமரகுருபரன் கவிதைகள்



  • ₹200

  • SKU: VP2405
  • Author: Kumaragurubaran
  • Language: Tamil
  • Pages: 160
  • Availability: In Stock

கவிதையின் உலகமே சிறியது என்கையில் நவீன கவிஞனின் உலகம் மேலும் சிறியது. சில தருணங்களிலேனும் உறவு பிரிவு தனிமை என்னும் மூன்று பிரிவுகளில் நின்றுவிடுவது தான் தமிழ் நவீன கவிதையோ என்று எண்ணத்தோன்றும். குமரகுருபரனின் உலகம் அதனினும் சிறியது, ஒரு புல்நுனி பனித்துளியளவுக்கே. அதில் ஒரு மானுட உச்சத்திற்கான ஏக்கம் அதை எய்த முடியாதென்ற உணர்வில் உருவான சலிப்பும் உள்ளது. அந்த உச்சம் மானுட உறவொன்று தன் இயல்பான நிலையில் பேரழகும் கனிவும் கொள்கையில் நிகழ்வதென்று குமரகுருபரன் உருவகிக்கிறார். அறிந்த ஒன்று அடையப்படவே இயலாது என்ற நிலையில் சலிப்பை ஆற்றும் பொழுதுகளாக மதுவின் களியாட்டத்தை முன் வைக்கிறார். ஆற்றாமையும் மதுவும் அமுதும் அது திரிந்த நஞ்சும். அந்த மீச்சிறு துளி மிக விரிவாக எழுதப்பட்டிருக்க முடியாது அவ்வாறு விரித்திருந்தால் அது வெளிறி பொருள் இழந்திருக்கும் அது துளியாக செறிவு கொண்டிருப்பதனாலேயே ஒளியுடன் உள்ளது முத்தென தோற்றமளிக்கிறது.

பனித்துளியின் பொழுது சில நிமிடங்களாக இருக்கலாம். அது அத்தருணத்தில் தன்னுள் விண்ணைச் சூடியிருக்கிறது பெருங்கடல்களைப்போல் முடிவின்மையை அதற்கு அந்த வானம் அளிக்கிறது. அதனூடாக அது அழிவற்ற நிரந்தரம் ஒன்றையும் அடைந்துள்ளது.

 

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up