Samakala Malayala Kavithaikal / சமகால மலையாளக் கவிதைகள்
-
₹135
- SKU: SA0044
- ISBN: 9788126041961
- Translator: S.Sivamani
- Author: Sugathakumari
- Language: Tamil
- Pages: 260
- Availability: In Stock
மகாகவி ஜி. சங்கரக் குருப்பு முதல் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு வரையுள்ள
கவிஞர்கள், 1950 முதல் 1980 வரை எழுதியுள்ள கவிதைகளிலிருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட 56 கவிதைகளின்
தொகுப்பே இந்நூல். 'கடுமையும்,
மென்மையும், ரௌத்திரமும், சாந்தமும், தாமஸமும், சத்துவமுமான பண்டை நாட்டிய அரங்காடலின்
பிரதிபலிப்புதான் இந்தக் கவிஞர்கள் காட்டும் கவிதைச் சித்திரங்கள்.”
புல்லாங்குழலிலிருந்து நாத வெள்ளத்தைக் கொண்டு வரும் அற்புதம் தான் இது
முடிவின்மையை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் காற்சுவடுகள்தான் இவை.
சுகதகுமாரி (1934)- இதன் தொகுப்பாசிரியர்,
இவர் சமகால மலையாளக்
கவிஞர்களுள் குறிப்பிடத்தக்க கவிஞர். 'முத்துச் சிப்பி, இரவில் மலரும்
பூக்கள், கனவு பூமி,
இருள் சிறகுகள், இரவு மழை, கோவில் மணி என்பவை இவரது முக்கியமான கவிதைத்
தொகுப்புகள். 'ஓடக்குழல்,
பரிசு ஆசான் பரிசு,
வயலார் பரிசு' எனப் பல பரிசுகள் பெற்றுள்ளார். கேரள மாநில
பால்பவன் முதல்வராக விளங்குவதோடு இயற்கைப் பாதுகாப்புக் குழுவின் செயலராகவும்
அங்கம் வகிக்கிறார்.
இந்நூலைத் தமிழாக்கம் செய்துள்ள சா. சிவமணி ஈரோடு சிக்கய்ய நாயக்கர்
கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். மலையாளம் தமிழ் என்ற இரு
மொழிகளிலும் தேர்ச்சி மிக்கவர். பல ஆண்டுகளாக மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டு
வருகிறார். அகத்திணைக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் மலையாள நாவல்களை ஆய்வு
செய்துள்ளார். இவரது 'கண்ணகி கதைகள்
என்ற ஆய்வு நூல் கேரளம், தமிழகம், ஈழம் பகுதிகளில் வழங்கிவரும் கண்ணகி தொடர்பான
செய்திகளை ஆராய்ந்துள்ளது.

