Mahaswetha Deviyin Sirukathaikal / மஹாஸ்வேதா தேவியின் சிறுகதைகள்



  • ₹195

  • SKU: NBT011
  • ISBN: 9788123728573
  • Translator: N.S. Jagannathan
  • Author: Mahaswetha devi
  • Language: Tamil
  • Pages: 240
  • Availability: In Stock

கதாசிரியை மஹாஸ்வேதா தேவி தானே தேர்ந்தெடுத்த ஒன்பது கதைகள் இந்தப் புதுத் தொகுப்பில் உள்ளன. இவற்றில் எட்டு கதைகள் சமூக பொதுவோட்டத்திலிருந்து ஒதுக்கப்பட்ட மக்களை மையமாகக் கொண்டவை. இவர்கள் பொதுப் பண்பாடு, வரலாறு இவ்விரண்டின் விளிம்புகளில் உழலும், நசுக்கப்பட்ட மக்கள்.


தன் கதைகள், நாவல்களில் மஹாஸ்வேதா தேவி பயன்படுத்தும் கதைப்பாங்கில் யதார்த்தம் இடம்பெறும் போதே, வரலாற்றில் தொடர்ந்து மாறி மாறி, புது வடிவம் பெறும் யதார்த்தத்தைக் காட்டுவதற்காக வித விதமான, மொழி, நிகழ்ச்சி விரிவுரை உத்திகள் கையாளப்படுகின்றன. இங்கு வரலாறு என்பதன் பொருள் வெறும் இறந்த காலத்தின் மூல ஊற்று மட்டுமல்ல; நமது பண்பாட்டுப் பாரம்பரியம் பற்றிய விரிவுரை மட்டுமல்ல; கடந்த காலம் வருங்காலத்திற்கு செல்லும் திசை பற்றிய சூசகமும் இதில் இருக்கிறது. ஆனால், வருங்காலத்தைப் பற்றி இத்தரிசனத்தில் சுலபமான நம்பிக்கைகளுக்கு இடமில்லை, ஆனால் நடப்புக் காலத்தின் மத்தியில் வருங்காலத்தின் விதை இருக்கிறது என்ற ஆதிகதை இயல்புள்ள சூசகம் இருக்கிறது. யதார்த்தத்தில் இப்படி ஒரு வேளை நடக்காதிருக்கலாம். நடந்திருந்தாலும், சில இடங்களில் திடீர்வெடிப்பாக நிகழ்ந்திருக்கக்கூடும். அத்தகைய நிகழ்விற்கு, நிகழ்வு பற்றிய சாத்தியக்கூறுக்கு, மஹாஸ்வேதாதேவி ஓர் உருவகம் போன்ற கற்பனை உருவத்தைக் கொடுக்கிறார்.



Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up