Oru Pazhaiya Kizhavarum Oru Puthiya Ulakamum / ஒரு பழைய கிழவரும் ஒரு புதிய உலகமும்



  • ₹215

  • SKU: NBT013
  • ISBN: 9788123768519
  • Author: Aadhavan
  • Language: Tamil
  • Pages: 209
  • Availability: In Stock

கதாபாத்திரங்களின் உள்மன உணர்வுகளின் தொடர்ச்சி யினாலேயே கதைகளை நகர்த்திச் செல்பவர் ஆதவன். பெரும் நகரங்களில் வாழும் மனிதர்களின் சமூக ஒவ்வாமைகள், தமக்குத் தாமே அந்நியப்பட்டு அவர்கள் படும் அவலங்கள், இளைய தலைமுறையினர் தமக்கான முகம் தேடும்-ஆதவனின் வார்த்தைகளில் கூறுவதானால் 'ஹோதா' தேடும் முயற்சிகள், அவர்களது பாலுணர்வுச் சிக்கல்கள் என்று, சமூக-அகமனப் பிரச்சினைகளை ஒருங்கிணைத்து எழுத்தில் வடிக்கப்பட்டவை ஆதவனின் படைப்புகள். இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் ஒவ்வொன்றும் அகமனப் பார்வையில் புறநிகழ்ச்சிகளை பரிசீலனைக்கு உள்ளாக்குகின்றன.

 

ஆதவன் (இயற்பெயர் கே.எஸ். சுந்தரம், பி. 1942) கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர். இந்திய ரயில்வேயில் சிலகாலம் பணியாற்றியபின் நேஷனல் புக் டிரஸ்டின் தமிழ்ப் பிரிவு ஆசிரியராகப் பொறுப்பு வகித்தார். என் பெயர் ராமசேஷன், காகித மலர்கள் உள்ளிட்ட நாவல்கள், பல சிறுகதைத் தொகுதிகள், புழுதியில் வீணை என்னும் நாடகம் என குறைந்த வயதில் நிறைய எழுதியவர். 'முதலில் இரவு வரும்' என்ற சிறுகதைத் தொகுப்புக்கு 1987ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது, அவர் மறை விற்குப் பின் வழங்கப்பட்டது.

 

 

 

 

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up