ThalaiKeezh Vikithangkal / தலைகீழ் விகிதங்கள்



  • ₹270

  • SKU: VIJ012
  • ISBN: 8184460430
  • Author: Nanjil Nadan
  • Language: Tamil
  • Pages: 296
  • Availability: In Stock

நாஞ்சில் நாடனின் எழுத்தின், பார்வையின் குணங்கள் என எதை எதையெல்லாம் காண்கிறோமோ அவை ஒவ்வொன்றும் பெறும் பரிமாணங்கள் பல இருக்கும். ஒரு கேலி, தனித்து வெறும் கேலியாக வருவதில்லை. அச்சமூக நிலையின் அவலத்தைச் சொல்லும். உள்ளீடற்ற தமிழப் புலமை உலகையும் கேலி செய்யும்.

தமிழ் நாட்டைப் பிடித்திருக்கும் கலாச்சார சீரழிவையும் முன்வைக்கும். இதற்கு நிறையத் தைரியம் வேண்டும்.

இச் சீரழிவு நாஞ்சில் நாடன் முன்வைக்கும் கேலிகளில் மாத்திரம் சிறைப்படுவதில்லை. அவர் முன்வைக்கும் அனுபவ உலகம் முழுவதையும் பார்த்தால், அது மனித வாழ்வின் சீரழிவு, படர்ந்து பரவியிருக்கும் பொய்மை இவற்றையே சித்தரிப்பதைத் தன் முழுப்பார்வையாகக் கொண்டுள்ளதாகத் தோன்றும். அது நாஞ்சில் நாட்டைப் பற்றி மாத்திரமேயான சித்திரம் என்று சொல்லப்பட்டாலும் அது தமிழ்நாடு முழுவதுமான சித்திரம் தான்.

-வெங்கட் சாமிநாதன்

Write a review

Captcha