Bangarwadi / பன்கர்வாடி



  • ₹215

  • SKU: NBT016
  • ISBN: 9354912214
  • Translator: Umachandran
  • Author: Vyankatesh Madgulkar
  • Language: Tamil
  • Pages: 159
  • Availability: In Stock

ஆடு மேய்ப்பவர்களின் வாழ்க்கையை நிலைக்களனாகக் கொண்ட இந்நாவல், இவர்களுடைய துன்பங்கள். அச்சமின்மை, ஏழ்மை. அறியாமை, இயற்கையின் சோதனை, சீர்குலைவு, மனிதத்தன்மை, புல்லும் கோரையும் வேய்ந்த கூரைக் குடிசைகள் - இவை யாவற்றையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. இயற்கையின் உள்ளார்ந்த கடுமையான சட்டதிட்டங்களும், அவற்றோடு இணைந்த மனித நியதியின் விசித்திரங்களும் இந்நாவலில் நுட்பமாகப் பதிவாகியுள்ளன. பிரபல மராத்தி எழுத்தாளர் வெங்கடேஷ் மாட்கூல்கரின் மிகச்சிறந்த நாவல் இது. 1995இல் திரைப்படமாகவும் வெளிவந்து, 1996ஆம் ஆண்டு சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றது.


வெங்கடேஷ் திகம்பர் மாட்கூல்கர் (1927-2001), அவுந்த் சமஸ்தானத்தில் இருந்த மாட்கூல் என்னும் கிராமத்தில் பிறந்தவர். எட்டு நாவல்கள். இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள்,40 திரைப்பட வசனங்கள், நாட்டுப்புற நாடகங்கள், பயணக் கட்டுரைகள், இயற்கை குறித்தான கட்டுரைகள் என பல துறைகளிலும் எழுதியுள்ளார். ஆங்கிலத்திலிருந்து மராட்டிக்கு மொழியாக்கமும் செய்தார்.


தமிழாக்கம் செய்தவர் உமா சந்திரன். இவரது இயற்பெயர் ராமச்சந்திரன். இவர் எழுதிய 'முள்ளும் மலரும்' நாவல் 1967இல் கல்கி இதழின் வெள்ளிவிழாப் போட்டியில் முதல் பரிசு பெற்றது. அதுவே பிறகு திரைப்படமாக வெளிவந்து பெரும் புகழ் பெற்றது. வானொலியில் பணியாற்றிய உமாசந்திரன், ஏராளமான சிறுகதைகள்,நாவல்க கட்டுரைகளை எழுதியவர். 

Write a review

Captcha