Pathumavudaiya Aadum Ilamparuvathu Thozhiyum / பாத்துமாவுடைய ஆடும், இளம்பருவத்துத் தோழியும்



  • ₹170

  • Brand:Books
  • SKU: NBT017
  • ISBN: 8123771967
  • Translator: C.S. Vijayam
  • Author: Vaikom Muhammed Basheer
  • Language: Tamil
  • Pages: 146
  • Availability: In Stock

உலகத்தின் மர்மங்களை ஆராயும் பஷீரின் நாவல்கள் எளியவை, அழகானவை நாடோடிப் பாடல்களைப் போன்றவை ஒரு விணையின் இனிய நாதத்தின் கவர்ச்சி அவரது வாக்கியங்களில் தென்படுகின்றது. கிராமத்து வீடு ஒன்றையே பரந்த உலகமாக சித்திரிக்கும் பஷீரின் 'பாத்தும்மாயுடே ஆடு' அவரது குடும்பக் கதை அதில் வரும் பாத்திரங்கள் அவருடைய சகோதரர், சகோதரி, தாயார் முதலானவர் ஆனால், அது எழுதப்பட்டிருக்கும் சிறப்பான பாணியும், நடையும் அதை நம் அனைவரது கதையாக்கி விடுகின்றன. பஷீரின் படைப்புத்திறனுக்கு 'பால்யகால சகி' நல்லதொரு எடுத்துக்காட்டு வெளித்தோற்றத்துக்கு இதுவும் ஒரு காதல் கதைதான். இந்தக் காதல் கதையின் நிழலில் மனிதனின் அதிர்ஷ்டம், வாழ்க்கை ஆகியவற்றின் மர்மப்பொருள் விரவிக் கிடக்கிறது; சிறியதொரு முத்தில் உலகின் இரகசியத்தை உள்ளடக்கும் இக்கலைத்திறன் அற்புதமானது. பஷீரின் நாவல்கள் அனைத்துமே இத்தகைய சிறப்புடையவைதாம். அதனால்தான் இளைஞர், முதியோர் என்ற வேறுபாடின்றி வாசகர்களிடையே அவருடைய நாவல்கள் பிரபலமாக இருக்கின்றன.


 வைக்கம் முகமது பஷீர் (1908-1994) மலையாள மொழியின் முதன்மையான இலக்கிய படைப்பாளிகளில் ஒருவர் கேரளத்தில் வைக்கம் அருகே தலையோலப்பறம்பு என்ற ஊரில் பிறந்தார். இளம்வயதிலேயே சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். பின்னர் நாடோடியாக வாழ்ந்து பார்த்தபிறகு சிறுகதைகளும் நாவல்களும் எழுத ஆரம்பித்தார். வாழ்க்கையில் பலவிதமான அனுபவங்கள் வழியாகச் சென்றவர் பஷீர் அந்த அனுபவங்களை இலக்கியமாகப் படைத்து மலையாள இலக்கியத்தில் தனியிடம் பிடித்தவர் கேரள சாகித்ய அகாதமி, சாகித்ய அகாதமி, பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் பெற்றவர்.


Write a review

Captcha