Sree Narayana Guru / ஸ்ரீ நாராயண குரு



  • ₹95

  • SKU: NBT018
  • ISBN: 8123746598
  • Translator: M.Seshan
  • Author: Murkot Kunhappa
  • Language: Tamil
  • Pages: 98
  • Availability: In Stock
Publication NBT Murkot Kunhappa

ஸ்ரீ நாராயண குரு இந்தியா ஈன்றெடுத்த மாபெரும் ஞானிகளுள் ஒருவர்; அவருடைய போதனைகள் உலகளாவிய பொருத்தப்பாடு உடையவை. அவருடைய புகழ்பெற்ற செய்தி-மனிதனுக்கு ஒரே கடவுள், ஒரே மதம், ஒரே ஜாதி. இந்தச் செய்தி உலகெங்குமுள்ள மக்கள் இனம், மதம், ஜாதி போன்ற வேறுபாடுகளை மறந்து ஒத்திசைந்து வாழ முன்வர வேண்டும், ஒரே உலக சமுதாயமாக மலர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது.


எளிமையான மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் அவருடைய வாழ்க்கை மற்றும் அவரது போதனைகளின் சுருக்கத்தை அளிக்கிற அதே வேளையில், ஒடுக்கப்பட்ட மக்களை மேம்படுத்த உழைக்க விரும்புபவர்களுக்கு ஒரு முன்மாதிரி யாகவும் திகழ்கிறது.


நூலாசிரியர் முர்கூட் குன்னப்பா, தனது சிறு வயதிலிருந்தே ஸ்ரீ நாராயண குருவின் சேவைகளைப் பற்றி அறியும் வாய்ப்புக் கிடைத்தவர். அதன் தொடர்ச்சியாக, குருவின் எழுத்துகளை ஆழமாகப் படித்து, தான் புரிந்து கொண்டதை விரிவு படுத்தினார். இவர் ஆங்கிலம் மற்றும் மலையாள பத்திரிகைகளுக்கு கட்டுரைகளும் எழுதி வருகிறார்

Write a review

Captcha