Sangili Boodham / சங்கிலி பூதம்
-
₹220
- SKU: VAN002
- ISBN: 9788198496713
- Author: Bogan Sankar
- Language: Tamil
- Pages: 120
- Availability: In Stock
கவிதை எனக்கு என் வாழ்வின் பெரிய துயர்களுடன், சிறிய சந்தோஷங்களுடன், என் பயங்களுடன் இருப்பதாகவும் இல்லாததாகவும் நான் மாற்றி மாற்றி நினைத்துக்கொள்ளும் கடவுளுடன் உரையாடும் ஊடகம்.
கவிதையைக் கலையாக இலக்கியத்தின் வகையாக மட்டும் காணும் பார்வை மிகவும் குறைபட்ட ஒன்று. கவிதை ஒன்றுதான் இசைக்கு அருகிலும் தத்துவத்தின் அருகிலும் ஒரேநேரத்தில் செல்கிறது. ஒரேநேரத்தில் அது சுய புலம்பலாகவும், மானுடத் திரள் குறித்த கவலையாகவும், பிரபஞ்ச கானமாகவும், வாழ்வின் ஆதாரம்,அர்த்தம் அல்லது அர்த்தமின்மை குறித்த வியப்பாகவும் அச்சமாகவும் இருக்கிறது.
ஒரேநேரத்தில் ஒரு முனிவனின் வாழ்க்கையையும் பெரும் பாவி ஒருவனின் வாழ்க்கையையும் வாழ முடிகிறவன் கவிஞன். அவனே உலகத்தின் மிகப்பெரிய தீரன். அவனே இவ்வுலகத்தின் மிகப்பெரிய கோழை. இந்தக் கவிதைகள் ஒருவிதத்தில் என்னுடைய அக விசாரணை, அற தரிசனம், ஆன்மீக அனுபவம். கோழையும் தீரனுமான கடைந்தெடுத்த மடையனும்
ஞானியுமான இன்னொரு கவிஞனின் மற்றுமொரு கவிதை நூல் இது.
