Maitreyi Matrum Pala Kathaikal / மைத்ரேயி மற்றும் பல கதைகள்
-
₹170
- SKU: AD0002
- ISBN: 9788177202243
- Author: M.D. Muthukumaraswamy
- Language: Tamil
- Pages: 208
- Availability: In Stock
எம்.டி. முத்துக்குமாரசாமி ‘ஸில்வியா' என்னும் புனைபெயரில் 1980களில் எழுத ஆரம்பித்த கதைகள் தம் நூதன வடிவங்களாலும் மீபுனைவின் புதிய உத்திகளாலும் தமிழ் இலக்கியத்தில் சாத்தியப்பாடுகளை உருவாக்கின. 'ஸில்வியா’ கதைகளும் புதிய கதைகளும் கொண்ட இத்தொகுப்பில் எம்.டி. முத்துக்குமாரசாமி தன் கலைப் பார்வையின் பல பரிமாணங்களை வெளிப்படுத்துகிறார். அவருடைய கதைகள் தமிழ் நாகரிகத்தின் அறியப்படாத ஏதோ ஓர் அழிவையும் அதற்கான புலம்பலையும் கேவல், அழுகை, வெறிகொண்ட நகைப்பு, தன்னிலையின் சிதறல், அதீத ஒழுங்கு, முற்றிலும் சிதைந்த வடிவம் எனப் பல வெளிப்பாடுகளை நிகழ்த்துகின்றன. அதனாலேயே இக்கதைகள் வாசக அகத்தின் வரலாற்று ஆவணங்களாக உருமாறும் சாத்தியம் கொள்கின்றன.
