Veerankuty Kavithaigal / வீரான்குட்டி கவிதைகள்



  • ₹100

  • SKU: THA020
  • ISBN: 9789395560405
  • Translator: Suja
  • Author: Veerankutty
  • Language: Tamil
  • Pages: 88
  • Availability: In Stock
Publication Thannaram Veerankutty

தன்னைத்தானே தொடங்கிக்கொண்டவையோ என்ற துணுக்குறலை ஏற்படுத்தும்படிக்கு பிரயத்தனங்களற்று இருக்கின்றன இந்நூலின் பெரும்பாலான கவிதைகள். இந்நூற்றாண்டின் ஒலிபெருக்கி இரைச்சலையோ செய்தித்தாள்களின் நெடியையோ இவை நமக்குப் பகிர்வதில்லை. மாறாக, காணும் ஒவ்வொன்றையும் மகாவிளையாட்டின் சிறுதுளியென்றாக்கிக் கடக்கும் ததும்பும் விழிப்புணர்ச்சியையும் திடீரென நம் விழிகள் புதுப்பிக்கப்பட்டது மாதிரியான திகைப்பையுமே இக்கவிதைகளினூடாக நாம் சென்றடைகிறோம். வீரான்குட்டியின் கவிதைகளுக்கு ஈர்ப்புவிசையின் சிறையிலிருந்து தப்பிச்செல்வதற்கான அத்தனை உபாயங்களும் தெரியும் என்றுதான் சொல்லவேண்டும். ~ வே. நி. சூர்யா மலையாள மொழியின் பிராதனக் கவிஞர்களுள் ஒருவராகிய வீரான்குட்டி அவர்களின் சில கவிதைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு தன்னறம் நூல்வெளி வாயிலாக அச்சடைந்து வெளிவந்துள்ளது. தோழமை சுஜா அவர்கள் இக்கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். கண்ணூர் பல்கலைக்கழகம், கேரளப் பல்கலைக்கழகம், காலிகட் பல்கலைக்கழகம், மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் உள்ளிட்டவைகளில் இவரது கவிதைகள் பாடமாக உள்ளன. ஜெர்மன், ஆங்கிலம், கன்னடம், மராத்தி, இந்தி உட்பட பிற மொழிகளிலும் இவரது படைப்புகள் மொழியாக்கம் அடைந்துள்ளன. கேரளத்தின் இன்றியமையாத கவிதைகளைத் தோற்றுவித்த கவிஞர் வீரான்குட்டியின் சிறந்த கவிதைகளின் தமிழ் சேகரமாக இந்நூல் விரும்பி வாசிக்கப்படும் தொடர்ச்சியை நிச்சயம் உருவாக்கும்.

Write a review

Captcha