Thennindhya Koyilgal / தென்னிந்தியக் கோயில்கள்



  • ₹200

  • SKU: NBT019
  • ISBN: 9788123716404
  • Translator: Dr. Su. Venkataraman
  • Author: K.R.Srinivasan
  • Language: Tamil
  • Pages: 226
  • Availability: In Stock
Publication NBT K.R.Srinivasan

கோயில்கள் இந்தியக் கட்டிடக்கலையின் குறிப்பிடத்தக்க நினைவுச்சின்னங்களாகத் திகழ்கின்றன. உருவ வழிபாட்டின் நிலைபேறாக்கத்தைத்  தொடர்ந்தும் சடங்குகளின் வளர்ச்சியைத் தொடர்ந்தும் கோயில் தென்னிந்திய, அமைப்பு விரிவுபெறலானது. தென்னிந்திய, வடஇந்தியக் கோயில்களுக்கிடையிலும் இந்தியாவின் பிற பகுதிக் கோயில்களிலும் கட்டுமான அமைப்புகளில் காணப்பட்ட பல்வேறு வளர்ச்சிகள் பிற்காலத்தில் ஏற்பட்டவை. இன்றளவும் இடையீடின்றித் தொடர்ந்து வருவதும் நடப்பில் உள்ளதுமான தென்னிந்தியக் கோயில்களின் விரிவான சித்திரத்தை கால வரிசையில்  எடுத்துரைக்கும் இந்நூல் கட்டிடக் கலையில்.காணப்படும் நுட்பமான முறைகளின் வேறுபாடுகள், அமைப்பு முறைகளின் வேறுபாடுகள் தனித்தன்மைகள் ஆகியவற்றை விவரிக்கிறது.

இந்தியத் தொல்லியல் துறையின் துணைத்தலைமை இயக்குநர், தொல்லியல் பள்ளி இயக்குநர், நினைவுச் சின்னங்கள் என இயக்குநர் துறை பல்வேறு பொறுப்புகளில் இருபது ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்தவர் கே.ஆர். சீனிவாசன். கோயில் கட்டிடக்கலை, சிற்பம், படிமவியல் ஆகியவை அவருடைய ஈடுபாடு மிக்க துறைகளாகும். இந்தியக் கோயில்கள் பற்றிய ஆய்வைத் தொடங்கிய அவர் தென்னிந்தியக் கோயில்கள், தக்காணப்பகுதிக் கோயில்கள் பற்றிய விரிவான ஆய்வினைச் செய்துள்ளார். தென்னிந்திய தொல்பொருள் ஆய்வுச் சங்கத்தின் (சென்னை) தலைவராகவும் புதுதில்லி, இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் தொல்லியல் பள்ளி உறுப்பினராகவும் பொறுப்புகள் வகித்திருக்கிறார்.


Write a review

Captcha