Than Velippaadu / தன் வெளிப்பாடு
-
₹150
- SKU: NBT026
- ISBN: 9788123717890
- Translator: Su. Krishnamurthy
- Author: Sunil Gangopadhyay
- Language: Tamil
- Pages: 196
- Availability: In Stock
முற்றிலும் வேறுபட்ட வகையைச் சேர்ந்த, எந்த விதிகளுக்கும் கட்டுப்படாத இந்த நாவல், கதாநாயகன் சுநீலின் வாக்குமூலமாகும். இந்த நாவலில் நிகழ்ச்சிகளைவிட கதாநாயகனின் உள்ளார்ந்த அனுபவங்களே முக்கியத்துவம் பெறுகின்றன. கதாநாயகன் காதலை நம்புகிறான். காதலிக்க விரும்புகிறான். இந்த நாவலுக்குத் தேவைப்படுவது கதையின் கட்டுக்கோப்பு அல்ல.பாத்திரங்களின் ஆளுமையின் மலர்ச்சிதான். கதாநாயகன் தான் பார்த்ததை அப்படியே சொல்கிறான் என்று கூறினால் போதாது. பார்ப்பது பெரிய விஷயமில்லை. பார்த்துக்கொண்டே சுநீலின் ஆளுமை மலர்வதுதான் முக்கியம். இந்த நாவலின் கதையோட்டத்தில் ஓர் உள்ளார்ந்த பிணைப்பு இருப்பதை அக்கறையுள்ள எந்த வாசகனும் உணர்வான். இந்தப் பிணைப்பு நாவலின் வெளிப்புறக் கட்டுக்கோப்பை விட உறுதியானது.சுநீல் கங்கோபாத்தியாய் அடிப்படையில் ஒரு கவி. கவிக்குரிய அனுதாபம் அவரது இந்த நாவலிலும் வெளிப்படுகிறது. ஆத்மபிரகாஷ் (தன் வெளிப்பாடு) ஒரு கவியின் படைப்பு. நாவலாசிரியர், தம் பெயர் கொண்ட ஒரு கதாநாயகன் மூலம் தம் வேதனை நிறைந்த ஆளுமையையே வெளிப்படுத்துகிறார்.கொல்கத்தாவிலேயே பல காலம் வசித்தவர் சு. கிருஷ்ணமூர்த்தி. வங்க மொழியிலிருந்து நேரடியாகத் தமிழாக்கம் செய்வதில் சிறந்து விளங்கியவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர். நேஷனல் புக் டிரஸ்டுக்காக ஏராளமான நூல்களை தமிழாக்கம் செய்தவர்.
