Gandhiyadikalum avarathu Seedarkalum / காந்தியடிகளும் அவரது சீடர்களும்
-
₹185
- SKU: NBT027
- ISBN: 9788123733906
- Translator: Su. Venkataraman
- Author: Jayant Pandya
- Language: Tamil
- Pages: 224
- Availability: In Stock
மகாத்மா காந்தி வேறு எந்த இடத்தையும்விடச் சபர்மதி ஆசிரமமே மிகவும் பிடித்தமான இடம் ஆகும். பல்வேறு துறைகளையும் சார்ந்த ஆண்கள், பெண்கள் பலரை அவர் ஈர்த்துள்ளார். கான் அப்துல் கபார் கான், வினோபா பாவே, ஜே.சி. குமரப்பா, ஜாகிர் ஹூசேன், ஜே.பி.கிருபாளனி ,மீரா பென் என்று பலர் அதில் அடங்குவர். இந்த நூலில் உள்ள 12 வாழ்க்கை வரலாற்றுப் பகுதிகள் சிறந்த காந்தியவாதிகளைப் பற்றியன.காந்தியச் சிந்தனையின்பால் அவர்கள் எவ்வாறு ஈர்க்கப்பட்டனர்.காந்தியின் எண்ணங்களால் அவர்களின் எதிர்கால வாழ்க்கை எவ்வாறு உருப்பெற்றது. என இச்சித்திரங்கள் கூறும். கல்வி,நிலச்சீர்திருத்தம், திட்டமிடல் ஆகியவற்றுடன் இந்திய விடுதலைப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவர்கள் செய்துள்ள பங்களிப்பையும் இந்த நூல் கூறுகிறது. காந்திய இயக்கத்துடன் இந்த நூலின் ஆசிரியருக்கு உள்ள தொடர்பு, இந்த வாழ்க்கை வரலாற்றுப் பகுதிகளுக்கு வலுச் சேர்த்துள்ளது. அது, நூலின் முன்னுரைபோல அமைந்துள்ள முதல் இயலான காந்தியின் சமூகச் சிந்தனை கூறும் அறிமுக இயலாலும் புலப்படும். இந்த நூலில் இடம்பெற்றுள்ள கிளைக்கதைகள், வாசகர்களின் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும். இந்த நூலின் ஆசிரியர் ஜெயந்த் மகன்லால் பாண்ட்யா, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று. குஜராத்திலுள்ள பல்வேறு கல்லூரிகளில் பல ஆண்டுகள் ஆங்கிலம் கற்பித்த ஆசிரியர். குஜராத்தியில் மகாதேவ தேசாய் நினைவுத்தொகுப்பு நூல் ஒன்றை அவர் பதிப்பித்துள்ளார். ஆங்கிலத்தில் மீராபென் வரலாற்றை எழுதியுள்ளார். பல ஆண்டுகள் குஜராத்தி மாதஇதழான நிர்க்ஷா-விற்கு அவர் ஆசிரியராகப் பணியாற்றி உள்ளார். இலக்கியப் புதையல்களான காளிதாசனின் மேகதூதத்தையும் ஹோமரின் இலியட்டையும் குஜராத்தி மொழியில் ஜெயந்த் பாண்ட்யா மொழிபெயர்த்துள்ளார்.
