Anrada Yogi / அன்றாட யோகி
-
₹240
- SKU: VP2507
- ISBN: 9789395260916
- Translator: Subhashree Sundaram
- Author: H.S.Sivaprakash
- Language: Tamil
- Pages: 176
- Availability: In Stock
சிவப்பிரகாஷ் தன்னுடைய தனிப்பட்ட தேடலில் சமரசமின்மை கொண்டவர். கருத்துகளை முன்வைப்பதில் ஒரு வகையான அஞ்சாமை அவரிடம் உண்டு. அதனாலேயே தொடர்ந்து பல விதமான விவாதங்களில் சிக்கிக் கொண்டவரும்கூட. நவீனத்துவராக தொடங்கிய சிவப்பிரகாஷ் இந்திய, சைவ மரபு சார்ந்த மெய்யியல் தேடல்களை நோக்கிச் சென்றார். யோகம், தியானம் ஆகியவற்றை பயின்றார். அதன் பதிவே இந்தச் சிறிய நூல்.
இந்த படைப்பில் ஒரு நவீனத்துவ எழுத்தாளர் தன் எல்லையை தன் தேடலின் மூலம் கடந்து சென்றதன் தடையங்களை பார்க்கிறோம். கர்நாடகத்தின் சைவ மரபுகள், அதற்கு உள்ளே அமைந்த பல்வேறு சனாதன மார்க்கங்களின் வழியாக சிவப்பிரகாஷ் கொண்ட பயணம் அந்த தளங்களில் ஈடுபடுபவர்களுக்கு உதவலாம். அந்த ஆர்வம் இல்லாதவர்களுக்கு ஒரு கலைஞனின் அகப்பயணம் என்ற வகையில் ஆழமாகப் பொருள்படலாம்.
