Mudhal Suvadu - Ilakkiya Munnodigal - 1 / முதல் சுவடு – இலக்கிய முன்னோடிகள் – 1
-
₹240
- SKU: VP2511
- ISBN: 978-93-9526-081-7
- Author: Jeyamohan / ஜெயமோகன்
- Language: tamil
- Availability: 2-3 Days
ஜெயமோகன் தமிழ் இலக்கிய முன்னோடிகள் இருபதுபேர் பற்றி
எழுதிய கட்டுரைகள் ஏழுநூல்களாக வெளிவந்தன. பின்னர் முழுநூலாகவும் அவை வெளிவந்தன. அவற்றில்
முதல் நூல் இது.
இந்நூலில் புதுமைப்பித்தனைப் பற்றிய ஒட்டுமொத்தமான
பார்வையை ஜெயமோகன் முன்வைக்கிறார். புதுமைப்பித்தன் ஏன் நவீனத்தமிழிலக்கியத்தின் முதன்மையான
படைப்பாளி என்றும், நவீனத்தமிழிலக்கியத்தின் எல்லா வகை எழுத்தும் அவரிடமிருந்து தொடங்குவதன்
முக்கியத்துவம் என்ன என்றும் விவாதிக்கிறார். புதுமைப்பித்தன் படைப்புகளிலுள்ள வெவ்வேறு
வகைமாதிரிகள், அவருடைய வெற்றிதோல்விகள் இதில் பேசப்படுகின்றன.
இந்நூலின் முன்னுரையாக அழகியல்சார்ந்த இலக்கிய விமர்சனம்
என்பது என்ன, அது எப்படி வேறுவகை விமர்சன மரபுகளில் இருந்து வேறுபடுகிறது என்பதை வரையறைசெய்து
கூறுகிறார்.
இலக்கிய விமர்சனம் என்பதும் ஓர் இலக்கியவகைமையே, இலக்கியப்படைப்புக்குரிய
சுவாரசியமான வாசிப்பும், வாசகனின் கற்பனையையும் சிந்தனையையும் தூண்டும் மொழி நடையும்
அதற்கும் தேவை என்றும் காட்டும் கட்டுரைகள் இவை.






