Osho - Marabum Meeralum / ஓஷோ - மரபும் மீறலும்
-
₹250
- SKU: VP2523
- ISBN: 978-93-9526-068-8
- Author: Jeyamohan / ஜெயமோகன்
- Language: Tamil
- Pages: 184
- Availability: In Stock
தமிழில் தீவிரமான வாசிப்பைப்
பெற்ற இந்திய மெய்யியல் சிந்தனையாளர்களில் ஒருவர்
ஓஷோ. ‘செக்ஸ் சாமியார்’ என இங்கே நாளிதழ்களால் வர்ணிக்கப்பட்ட
ஓஷோ அமெரிக்கா சென்று திரும்பி சமாதியடைந்தபின் அவருடைய நூல்கள் வழியாக அறிவுலகத்தின்
கவனத்துக்கு வந்தார். அவருடைய எளிய நேரடிப்பேச்சுநடை கொண்ட நூல்கள் ஓரளவு வாசிப்புப்
பழக்கம் கொண்டவர்களையும் ஈடுபடச் செய்தன. சம்பிரதாயமான மதம் சார்ந்த மெய்யியல் சிந்தனை
கொண்டிருந்தவர்கள் ஆன்மிகத்தின் இன்னொரு முகத்தை அவர் வழியாக அடையாளம் கண்டனர். அது
மீறல் சார்ந்தது. சுதந்திரமானது. ஆனால் ஓஷோ இங்கு எத்தனை வாசிக்கப்பட்டாரோ அந்த அளவுக்குப்
பேசப்படவில்லை. ஓஷோவை மேற்கோள் காட்டும் வழக்கமே இருந்தது. ஆகவே அவரும் மெல்லமெல்ல
வழக்கமான ஞானியரின் வரிசைக்குள் சென்று அமைந்தார். இந்நூல் ஓஷோவை இந்திய மெய்ஞானமரபின்
பின்னணியில், இன்றைய வாழ்க்கையின் கேள்விகளின் அடிப்படையில் வரையறுக்க முயல்கிறது.
அவ்வாறாக ஓஷோ பற்றிய ஒரு விவாதத்தை உருவாக்குகிறது.
இது ஓஷோ என்ன சொன்னார்
என்பதைச் சொல்லும் நூல் அல்ல. ஓஷோவை விவாதிக்கும் நூல். ஜெயமோகன் கோவையில் ஆற்றிய நான்கு
நாள் தொடர் உரையின் எழுத்துவடிவம். உரையின் தன்னியல்பான ஓட்டம் கொண்டிருப்பதனால் செறிவான
கருத்துக்களக் கொண்டிருந்தாலும் எளிய வாசிப்புக்குரியதாக உள்ளது இந்நூல்
