Na.Pichamurthyin Kalai - Marabum Manidha Neyamum / ந.பிச்சமூர்த்தியின் கலை – மரபும் மனித நேயமும்



  • ₹160

  • SKU: KCP036
  • ISBN: 9788187477099
  • Author: Sundara Ramasamy, சுந்தர ராமசாமி
  • Language: Tamil
  • Pages: 128
  • Availability: In Stock

ஒரு தேர்ந்த விமரிசகனுக்குரிய உயர்ந்த மனோதர்மத்துடனும் தர்க்கத் தெளிவுடனும் சுந்தர ராமசாமி இக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார். கட்டுரைகள் நெடுகிலும் அவரது கூர்மையான கிண்டல்கள் இழையோடுகின்றன. அவரது நவீன தமிழ் நடையழகு மனதைத் தொடுகிறது. ந.பி.யை இவ்வளவு துல்லியமாக யாரும் மதிப்பிட்டதில்லை என்ற உணர்வு புஸ்தகத்தைப் படித்து முடித்த பிறகு ஏற்படுகிறது.
உணர்வும் அறிவும் வெகு அற்புதமாக இக்கட்டுரைகளில் லயப்பட்டிருக்கின்றன. இந்த லயத்தைச் சொற்களால் விவரிக்க முடியாது. அனுபவத்தால்தான் உணர முடியும். தன் அழகுணர்ச்சியையும் சிந்தனையையும் தூண்டிய எரிய வைக்கும் பகுதிகள் ஏராளம். விமரிசனம் என்பதே ஒரு விதமான வறட்டுத்தனம் கொண்டதுதான். இந்த வறட்டுத்தனத்தை அருகில்கூட வரவிடாமல், மிகுந்த கலை நயத்தோடு புஸ்தகத்தை எழுதியிருக்கிறார் சு.ரா.

வண்ணநிலவன்

சுபமங்களா 

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up