Kadavulukku Velai Seybavar / கடவுளுக்கு வேலை செய்பவர்



  • ₹330

  • SKU: KCP162
  • ISBN: 9789355230294
  • Author: A.Muttulingam, அ.முத்துலிங்கம்
  • Language: Tamil
  • Pages: 256
  • Availability: In Stock

பரந்த அனுபவங்கள், அதைவிடப் பரந்த வாசிப்பு, இடையறாத பயணங்கள், முக்கியமான சந்திப்புகள் ஆகியவற்றிலிருந்து உருவாகுபவை அ. முத்துலிங்கத்தின் கட்டுரைகள். இவற்றில் அறிவியல், இலக்கியம், வாழ்வியல் ஆகியவை சார்ந்த தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவை வெறும் தகவல்கள் அல்ல. கூர்மையான அவதானிப்புகளும் ஆழமான சிந்தனைகளும் அலாதியான அங்கதமும் கூடியவை. அற்புதமான சொல்லாக்கங்களும் கவித்துவமான வர்ணிப்புகளும் கொண்டவை. சுவையான வாசிப்புக்கு உரியவை. ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதுப்புது அர்த்தங்களையும் பார்வைகளையும் தரக்கூடியவை.

புனைவா, கட்டுரையா என்ற ஐயம் ஏற்படும் அளவுக்குப் படைப்பூக்கம் கொண்ட முத்துலிங்கத்தின் கட்டுரைகளின் தேர்ந்தெடுத்த தொகுப்பு இது. கவிஞர் இசை தன்னுடைய ரசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்திருக்கும் இந்தத் தொகுப்பு தமிழில் கட்டுரை இலக்கியத்தின் செழுமைக்குச் சான்றாக விளங்குகிறது.                                                                   

தொகுப்பாசிரியர் இசை

Write a review

Captcha