Saraswathi Chandran / சரஸ்வதி சந்திரன்
-
₹465
- SKU: SA0053
- ISBN: 9789361832123
- Translator: T.K.Jayaraman
- Author: Govardhanram Madhavaram Tripathi
- Language: Tamil
- Pages: 288
- Availability: In Stock
சரஸ்வதிசந்திரன் என்னும் இந்த நூல் பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதியில் வெளிவந்தவுடன் கற்றறிந்த குஜராத்தி வாசகர்களிடையே பெரும் விழிப்பை மூட்டியது. இந்த புதினம் நான்கு பாகங்களும், இரண்டாயிரம் பக்கங்களும் கொண்டது. நூலாசிரியர், கோவர்தனராம் மாதவராம் திரிபாட்டி (1855 1907), இதை எழுதுவதற்குப் பதினான்கு வருடங்கள் எடுத்துக் கொண்டார்.. அந்நாளைய அரசியல் (ஊழல் நிறைந்த, நூற்றுக்கும் மேற்பட்ட சுதேசி சமஸ்தானங்கள், வெள்ளையரின் ஆட்சி) அவர்களால் சுரண்டப்பட்ட பொருளாதார நிலை, சமூக ஏற்றத்தாழ்வுகள் யாவற்றையும் தெள்ளெனப் படம்பிடித்துக் காட்டிய இந்நூலை அண்ணல் காந்தியடிகள் போற்றியிருக்கிறார்.
நூலாசிரியர் பம்பாய் பல்கலைக்கழகத்தின் வக்கீல் பட்டதாரி. ஆங்கில ஞானமும் பெற்றவர். இந்த நூல் குஜராத்தியின் முதல் புதினம் எனவும், பின்னர் குஜராத்தி இலக்கிய உலகில் செந்தரம் எனவும் புகழ் பெற்றிருக்கிறது.
பல்கலை குஜராத்தி மொழியிலிருந்து நேரடி மொழியாக்கம் செய்திருக்கும் டி.கே.ஜயராமன், சென்னை கழகத்திலிருந்து எம்.ஏ. பட்டமும் அமெரிக்காவில் ஹவாய் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். 1960ல் இந்திய ஆட்சிமைப் பணியில் நேரடித் தேர்வின் மூலம் சேர்ந்தவர். பல வருடங்கள் குஜராத் மாநிலத்தில் பணிபுரிந்தமையால் குஜராத்தியில் புலமை பெற்றவர். இதற்கு முன்னர் கலைமகள், தீபம், ஆனந்த விகடன் மற்றும் தினமணி கதிர் ஆகிய பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். கலைமகள் பிரசுராலயம் டி.கே. ஜயராமனின் குஜராத்தி சிறுகதைகள் எனும் தொகுதியை 1970ல் வெளியிட்டது. கோவையின் பவித்ரா பதிப்பகம், இதை மறு பதிப்பாக 2023ல் வெளிக்கொணர்ந்திருக்கிறது.







