Yeriyum Poonthottam / எரியும் பூந்தோட்டம்
-
₹145
- SKU: SA0056
- ISBN: 9788126048168
- Translator: Shantha Dutt
- Author: Saleem
- Language: Tamil
- Pages: 256
- Availability: In Stock
எரியும் பூந்தோட்டம் : ஒரே ஒரு தவறுதான் ஆனால் பின்விளைவாய் ஒரு மனிதன் மனதில் குடும்பத்தில் ஒட்டு மொத்த வாழ்க்கையிலும் எத்தனை எத்தனை பாதிப்புகள்? தப்பே செய்யாத ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை சிதைந்து சீரழிந்த அவலம்; இவ்விருவேறு மனிதர்களின் வாழ்க்கைப் பயணத்தின் மூலம் எய்ட்ஸ் எனும் கொடிய நோய் குறித்தும் அது தொடர்பான சமூகப் பார்வை மற்றும் பிரச்னைகள் குறித்தும் சுவாரசியமிகு ஆய்வு ஒன்றை முன்வைத்துள்ள நாவல்.
மூல ஆசிரியர் சலீம் : நடைமுறை வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை விஞ்ஞானப் பூர்வமாய் அணுகும் வித்தியாசமான பார்வை கொண்டவை சலீம் படைப்புகள். இதுவரை இவர் நான்கு நாவல்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் இருகவிதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். 'எரியும் பூந்தோட்டம்' எனும் இந்த நாவலின் தெலுங்கு மூலநூல் 'காலுதுன்ன பூலதோட’ சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளது.
சாந்தாதத் : குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்பாளரான இவர் இதுவரை மூன்று தமிழ் சிறுகதைத் தொகுப்புகள், ‘ஆண்களுக்கான இட ஒதுக்கீடு' எனும் கட்டுரை நூல் மற்றும் ஒன்பது மொழியாக்க நூல்களை வெளியிட்டுள்ளார்.







