Rudramadevi / உருத்திரமதேவி



  • ₹570

  • SKU: SA0057
  • ISBN: 9789355481832
  • Translator: N. Dakshinamoorthy
  • Author: Nori Narasimha Sasthiri
  • Language: Tamil
  • Pages: 454
  • Availability: In Stock

சரித்திர நாவல் எழுதுவது ஒரு கடினமான இலக்கிய முயற்சி. அது வரலாற்றுச் சம்பவங்களின் வருணனை அல்ல; கற்பனையான புனைகதையுமல்ல. இரண்டையும் பொருத்தமாகச் சேர்த்துப் படைத்தல் வேண்டும். இவ்வகையில் 'உருத்திரமதேவி' எழுதப்பட்டது.

தெலுங்கிலே மகாபாரதத்தை எழுதிய மூன்று மகாகவிகளில் ஒருவரான 'திக்கன்ன' கவிஞரின் வாழ்நாள் காலத்தைப் பின்னணியாகக் கொண்டது இது. ஓரங்கலில் ஆண்டு வந்த காகதீயரின் ஆட்சியை விவரிப்பது. தெலுங்கு வரலாற்றிலே தலைசிறந்த பெண் ஆட்சியாளரான உருத்திரமதேவியின் வரலாறு இது.

நோரி நரசிம்ம சாஸ்திரி அவர்கள் ஒரு தலைசிறந்த நாவலாசிரியர். முன் தலைமுறை நாவலாசிரியர்களின் படாடோபமான சொற்சிலம்பமல்லாது, நேரிய நடை கொண்டவர் திரு நோரி அவர்கள்.

பன்னிரண்டு - பதிமூன்றாம் நூற்றாண்டு ஆந்திர அரசியல் இலக்கிய சக்திகளைப் பற்றித் தெளிவாக உணர இந்த நாவல் உதவுகிறது.

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up