Periyasamy thooran Karuthanga Katturaigal / பெரியசாமித் தூரன் கருத்தரங்கக் கட்டுரைகள்
-
₹125
- SKU: SA0065
- ISBN: 9788126044672
- Translator: Sirpi Balasubramaniam
- Author: M.P.Periyasamy Thooran
- Language: Tamil
- Pages: 192
- Availability: In Stock
பெரியசாமித் தூரன் (1908-1987) : துறைதோறும் தமிழ் செழிக்கப் பல பணிகள் ஆற்றிய மகாகவி பாரதியார்தம் படைப்பாக்கங்களை 'பாரதிதமிழ்' என்று தொகுத்தளித்தார். கவிதை, பாடல், சிறுகதை, கட்டுரை, நாடகம், ஆன்மிகம், தத்துவம், இவற்றோடு சிறுவர் இலக்கியத் தளத்திலும் சீரியபங்களிப்பைச் செய்தவர். அனைத்துக்கும் மகுடமாய், அவர்தம் கலைக் களஞ்சியப் பெருந்தொகுப்புப் பணி சிறந்து விளங்குகின்றது.
அவர்தம் இலக்கியப் பங்களிப்புகளையும் அவர் ஆழ்ந்து கவனம் செலுத்திய பாரதியியல், சிறுவர் இலக்கியம் ஆகிய துறைகளையும் விளக்கும் பதினான்கு கட்டுரைகளின் தொகுப்பாக அமைகிறது இந்நூல்.
அவரது நூற்றாண்டு நினைவை ஓட்டி சாகித்திய அகாதெமியும், கோவை பாரதிய வித்யாபவனும் இணைந்து நிகழ்த்திய கருத்தரங்கின் இலக்கியப் பதிவாகும் இந்நூல்.
சிற்பி பாலசுப்பிரமணியம் : இந்நூலின் தொகுப்பாசிரியரான இவர் தமிழகத்தின் மூத்த கவிஞர்களில் ஒருவர். குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்பாளர். தம் கவிதை நூலுக்காகவும், மொழி பெயர்ப்புக்காகவும் இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.




