Draupadi / திரௌபதி
-
₹285
- SKU: SA0066
- ISBN: 9788126044597
- Translator: Ilambarathi
- Author: Yarlagadda Laksmiprasad
- Language: Tamil
- Pages: 368
- Availability: In Stock
திரௌபதி: இந்திய மொழிகளின் ஆதார இலக்கியமான மகாபாரதம், மீள்பார்வையாக இங்கு பெண்ணிய நோக்கில் விவரிக்கப் பட்டிருக்கிறது. நமக்கு ஏற்கனவே அறிமுகமான மகாபாரதக் கதைமாந்தர்கள், புதிய கோணத்தில் விமர்சிக்கப்படுகிறார்கள். ஒரு பெண் மையமாக இருந்து மகாபாரதக் கதையை இயக்கி நடத்துவதாக அமைந்த இலக்கியப் போக்கு, எல்லாருடைய கவனத்தையும் ஈர்க்கவல்லது. 2010ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்ற இந்தத் தெலுங்கு நாவலில், லக்ஷ்மிப்ரசாத் கையாண்டிருக்கும் கதை சொல்லும் முறையும், வர்ணனைகளின் துணைக்களமும் வாசகர்களை மிகவும் முனைப்புடன் படிக்கச் செய்வதாக உள்ளன. அங்கங்கே ஒரு குலுக்கு குலுக்கிச் சிந்திக்கச் செய்வதாகவும் உள்ளன. புராணம் சார்ந்த நாவல்களில் தனித்த இடம் பெறத்தக்க சுவையான நாவல் இது.
யார்லகட்ட லக்ஷ்மிப்ரசாத் : தெலுங்கு, ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர், 1992இல் மொழிபெயர்ப்புக்காகச் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றவர். அனைத்திந்திய அளவில் மொழி சார்ந்த நிறுவன அமைப்புகளில் முக்கியப் பங்கு வகிக்கும் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான இவர், பல்வேறு நாடுகளில் பயணம் செய்து அனுபவங்களைத் திரட்டி எழுத்தாக்கியிருக்கிறார்.
இளம்பாரதி: மொழிபெயர்ப்புத் துறையில் நாட்டம் கொண்டு தென்னிந்திய மொழிகள் அனைத்துடனும் இலக்கியத் தொடர்பு கொண்டிருக்கும் இவர், 1998ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புக்காகச் சாகித்திய அகாதெமி பரிசைப் பெற்றிருக்கிறார்.






