Kaliyin Kathai Vaya Bypass / கலியின் கதை: வயா பைபாஸ்
-
₹195
- SKU: SA0070
- ISBN: 9788126033560
- Translator: B.Balatripurasundari
- Author: Alka Saraogi
- Language: Tamil
- Pages: 365
- Availability: In Stock
கலியின் கதை என்ற இப்புதினம் கிஷோர் பாபு என்பவர் மூன்று வித வாழ்க்கைகளை எதிர்கொள்வதை உண்மையும் கற்பனை யும் கலந்த நிலையில் எடுத்துக்காட்டுகிறது. கிஷோர் பாபுவைக் கதாநாயகனாகக் கொண்ட ஒரு அற்புதமான சித்திரம். இத்ய அறுவை சிகிச்சை புரிந்து கொண்ட அவர் கல்கத்தா நகரில் சுற்றி அலைந்து திரிவதோடு மூன்று காலங்களிலும் பயணிப்பதோடு, வாழ்க்கைச் சூழலில் சிக்கித் தவிக்கும் அவரது மனப் போராட்டங்கள் புதினத்தை நகர்த்திச் செல்கிறது.
அல்கா ஸராவதி (1960) கல்கத்தாவில் பிறந்தவர். 'கதையைத் தேடி' (1996) என்ற கதைத் தொகுப்பு இவரது முதல் நூல். அதன் பின்னர், 'கலி கதா வயா பையாஸ்' (2001இல் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றது). இரண்டாவது கதை (சிறுகதை) 'சேஷ் காதம்பரி' (புதினம்) மற்றும் சில படைப்புகளைப் படைத்தவராவர். ரகுவீர் ஸஹாய் பற்றி ஆய்வு செய்தவர்.
இதனை மொழிபெயர்த்துள்ள திருமதி மொழிபெயர்ப்புப் படைப்புகள் பலவற்றைத் கதை, கட்டுரை, கவிதை, ஒப்பாய்வு இவற்றில் தம் சுயபடைப்பாகத் தமிழில் இதுவரை பத்து எழுதி வெளியிட்டுள்ளார். இவரது பதினைந்து நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழ்த் தொலைக்காட்சி பலவற்றிலும் பங்கு பெற்றவர். பாரதி பணிச் செல்வர், சிறுகதைச் செம்மல், ஞான ஒளி, இலக்கிய இணையர், முத்தமிழ் வித்தகர் முதலிய பட்டங்களையும், விருதுகளையும் பெற்றவர்.






