Ayalaka Tamil Ilakiyam / அயலகத் தமிழ் இலக்கியம்
-
₹150
- SKU: SA0071
- ISBN: 9788126017171
- Author: S. Kandasamy
- Language: Tamil
- Pages: 320
- Availability: In Stock
தமிழ் இலக்கியம் என்பது தற்போது தமிழ்நாட்டில் மட்டும் படைக்கப்படுவதோ படிக்கப்படுவதோ அல்ல. பல்வேறு நாடுகளில் கலாச்சார, பண்பாட்டுச் சூழலில் வாழும் தமிழ் எழுத்தாளர்கள் தாங்கள் கண்டதையும், கேட்டதையும் அனுபவித்ததையும் சொந்த ஈடுபாடு, ஆர்வம், அக்கறையின் அடிப்படையில் எழுதுகிறார்கள். பூகோள ரீதியில் மட்டுமின்றி கலாச்சார மாறுதல்களுக்கிடையில் மனித வாழ்க்கையின் மகத்துவமும் அவலமும் பாசாங்கற்ற முறையில் உள்ளொளி மிளிரப் படைக்கப்படும் எழுத்துக்களில் ஒரு விதமான சர்வதேசத் தன்மை இயல்பாகவே இடம்பெறுகிறது. சமீப ஆண்டுகளில் தமிழ் மொழிக்கு வரவு என்றே இதனைக் குறிப்பிட வேண்டும்.
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழ் மக்களில் சிலர் எழுத்தாளர்களாகத் தற்போது அதிகமாக வெளியுலகத்திற்குத் தெரிய ஆரம்பித்து இருக்கிறார்கள். அவர்களின் சொந்தப் படைப்புகளில் அவர்களின் சொந்த ஆசைகளோடு, எல்லா மனிதர்களுக்கும் பொதுவான ஆசைகளும் பிரதிபலிக்கின்றன. அத்தகைய படைப்புகளை ஒன்று திரட்டிச் சாகித்திய அகாதெமி முதன்முறையாக வாசகர்களுக்கு அளிக்கிறது.
சா. கந்தசாமி: நாற்பதாண்டுகளுக்கு மேலாக நாவல், சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள் எழுதிவரும் படைப்பு எழுத்தாளர், தயாரிப்பாளர் - இயக்குனர், ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களை பற்றி ஆவணப்படங்கள் எடுத்து வருகிறார். 'சுடுமண் சிலைகள்' பற்றிய இவரின் ஆவணப்படம் சர்வதேச விருது பெற்றது, 'விசாரணைக் கமிஷன்' என்ற நாவலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.



