Erumbu Varisai / எறும்பு வரிசை



  • ₹400

  • SKU: VP2608
  • ISBN: 9789395260145
  • Author: Yuvan Chandrasekar
  • Language: Tamil
  • Pages: 312
  • Availability: In Stock

சிறுகதைக்குள் இருப்பதுபோலவே கதையின், உணர்வுகளின், முரண்நிலைகளின் நீரோட்டம் குறுங்கதைக்குள் இருக்க வேண்டும். அது வழங்கும் கலையனுபவமும் குன்றக் கூடாது...

குறைந்த பட்ச விவரணைகள், அத்தியாவசியமான நகர்வுகள், அவசியமான அளவு பூடகத்தன்மை, நேரடியான மொழி, மெல்லிய விசாரணை என்று எனக்குள் ஒரு பட்டியல் ஓடுகிறது...

சிறுகதைகளின் செறிவின்மையையும் சரி, கவிதைகளின் வடிவ ஒருமையின்மையையும் சரி, ஈடுகட்டி நிரவும் பெரும்பணியைக் குறுங்கதைகள் செய்துவிட முடியும். செல்பேசிகளிலேயே வாசிப்பை முடித்துவிட முனையும் தலைமுறைக்கு, குறுங்கதைகளும், நுண்கதைகளும் மிக உதவிகரமானவை. வாசிப்பு குறைந்துவருகிற, காட்சிகளைத் துய்க்கும் விழைவு தூக்கலாக உள்ள புதிய தலைமுறைக்கு, மிகவும் அணுக்கமான வடிவமாக இவை இருக்கக்கூடும்; அந்த வகையில் எழுத்திலக் கியத்தின் ஆயுள் நீள்வதற்கேகூட உதவலாம்...

-பின்னுரையிலிருந்து

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up