Thiruvarutselvi / திருவருட்செல்வி
-
₹280
- SKU: VP2321
- ISBN: 9789395260534
- Author: Vishal Raja
- Language: Tamil
- Pages: 208
- Availability: In Stock
விஷால் ராஜாவின் கதைகளை, தீர்க்கவே முடியாத கலவர முனைகளின் சந்திப்பு
என்று வகுக்கலாம். குழந்தைகள் தங்கள் குழந்தைமையை ஒரு மூலையில்
தக்கவைத்துக் கொண்டே பெரியவர்கள் ஆகும் கதைகள் இவை. அந்தத் திருப்பத்தில்
நிகழும் தவிர்க்கவே முடியாத வேதனையையும் உருமாற்றத்தையும் இவை வலுவாக
வெளிப்படுத்துகின்றன.
நமது நிகழ்காலம், நாம் ஒட்டுமொத்தமாக வந்து
சேர்ந்தி ருக்கும் இடம் மற்றும் இருப்பு ஆகியவை மீதான கூர்மையான
விழிப்பையும் விமர்சனத்தையும் இந்நூலில் பார்க்கும்போது புதுமைப்பித்தன்
நமக்கு அளித்துப்போன நவீனமானதொரு லட்சியம் முழுமையாக நீர்த்துவிடவில்லை
என்ற நிறைவு ஏற்படுகிறது. விழிப்பும் விமர்சனமும் வேறு வேறு அல்ல என்றும்
தோன்றுகிறது.
கதை சொல்வதில் தீவிரம், மெனக்கெடல், கச்சிதம்,
உன்னிப்பு ஆகியவற்றை வளம்குன்றாமல் தக்கவைத்திருக்கிறார் விஷால்.
சாதனைகளையும் சாதனை ஆசிரியர்களையும் கண்ட தமிழ் சிறுகதை மரபில் ஒரு
காத்திரமான தொகுதி 'திருவருட்செல்வி'.






