Aathipazhi / ஆதிப்பழி
-
₹200
- SKU: NV0010
- Author: s.latchumanaperumal
- Language: Tamil
- Pages: 232
- Availability: In Stock
அம்மா இருந்தால் ரெங்கநாயலு இப்படி கஷ்டப்படுவாளா? தாய் வளர்ப்பில்லாத பொம்பளப் பிள்ளைகள் இருக்கவே கூடாது. எவ்வளவு வேலை. அவள் ஒரு நாள் உட்கார்ந்தால் அந்த வேலையை அவ்வளவு பேரும் முதல்சாமம் வரைக்கும் பாக்க வேண்டியிருக்கு. சூறாவளியு... சரி எந்தாயி ரெங்கநாயலு... சரி . அந்த மூணு பகலு மூணு ராத்திரி தவிர எப்பவாவது சொணங்குறாளா? பெத்தண்ணாவுக்கு களியும் தட்டப்பருப்பும் கலந்த ஊணு என்றால், எச்சில் மொளக் மொளக்கென்று ஊறும். அன்றைக்கு அந்தப் பசியிலும் வாயுணந்து போய்க் கிடந்தார். நெஞ்சு கனமேறிப் போயிருந்தது. அவருக்கு எல்லாமே மாயமாய் தெரிந்தது. பிறப்பு, வளப்பு, பெத்தவக, காடு, பாடு இதெல்லாம் என்ன? நாளைக்குப் பொழுது, இன்னும் காலங்கள், முடிவு, அப்பொ எல்லோரும் எங்கெங்கே எப்படி இருப்பாங்க? இரண்டாம் சாமம் ஆரம்பிச்சு பனியிலும் வெயிலிலுமா பாடுபட்டு பங்கபட்டு விஷக்கடிகள்ட்டயும் விலங்குகள்ட்டயும் தப்பிச்சு ஒரு வாய் சோத்துக்காகவும் ராத்திரி அலுத்து சலுத்து தன்னை மறந்து தூங்கும்போது, பெத்ததாயி குழந்தையை அணைக்கிற மாதிரி குளிர்ந்த காத்து உழைக்கிற மேனியை தழுவும்போது, அரைத் தூக்கத்துல நம்மள மறந்து கொஞ்சம் கோவணத்தை தளத்தி விடும்போது, ஒரு சுகிப்புத் தெரியுதே... அதுக்குத்தான் இந்த உசிரு அல்லாடுதா?




