Tatvamasi / தத்வமஸி
-
₹225
- SKU: SA0036
- ISBN: 9788126008229
- Translator: Thulasidhas
- Author: Sukumar Azhicode's
- Language: Tamil
- Pages: 440
- Availability: In Stock
சுகுமார் அழீக்கோடு பி. 1926: சமஸ்கிருதத்தில் எம்.ஏ., மலையாளத்தில் எம்.ஏ., பட்டங்களைப் பெற்ற இவர் 1981இல் கேரளப் பல்கலைக்கழகத்திலிருந்து இவர் பி.எச்.டி.,
பட்டமும் பெற்றார். பேராசிரியர் கல்லூரி
முதல்வர் என்று பணியாற்றிய சுகுமார் அழீக்கோடு, கோழிக்கோடு பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகவும் பணியாற்றி,
1986இல் ஓய்வு பெற்றார். தீனபந்து, மலையாள ஹரிஜன் தேசமித்ரம், நவயுகம் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவில் பொறுப்பு
வகித்தார். தத்வமஸி, மலையாள சாகித்ய விமர்சனம், தத்வமும் மனுஷ்யனும், சங்கரகுறுப்பு விமர்சிக்கப்பட்டுன்னு, ஆசான்றெ சீதாகாவ்யம் ஆகியன இவருக்குப் புகழ் தேடித் தந்த
நூல்கள்.
தத்வமஸி: நடுவண் அரசின் சாகித்திய அகாதெமி பரிசு,
கேரள அரசின் சாகித்திய அகாதெமி பரிசு, வயலார் பரிசு, அபுதாபி மலையாளி
சமாஜம் பரிசு, ராஜாஜி பரிசு முதலிய பத்துக்கு மேற்பட்ட
பரிசுகளைப் பெற்று வாசகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ருத்ர துளசிதாஸ்: திருநெல்வேலி மாவட்டம்
இளையரசனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் வேதியியலில் பேராசிரியராகப் பணியாற்றி
ஓய்வு பெற்றவர். அடுத்த வீடு, அனல் காற்று ஆகிய தெலுங்கு மொழிபெயர்ப்பு
நூல்களுக்காக நடுவண் அரசின் பரிசுகளைப் பெற்ற இவர் மய்யழிக் கரையோரம் என்ற மலையாள
நாவலுக்காக 1998ஆம் ஆண்டின் சாகித்திய அகாதெமி மொழி
பெயர்ப்புக்கான பரிசை பெற்றார். 1999ஆம் ஆண்டில் தி
சென்டினேரியன் ட்ரஸ்ட் அமைப்பின் சேவா ரத்னா விருது பெற்ற இவரது எழுத்துத் துறைகள்
கவிதை, சிறுகதை, அறிவியல் இலக்கியம், குழந்தை இலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகியன.
இவர் அறிந்த மொழிகள் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, சமஸ்கிருதம்.








