Vaazhkaipaathai / வாழ்க்கைப்பாதை
-
₹1,130
- SKU: SA0031
- ISBN: 9789355484666
- Translator: Nirmalya
- Author: Govintha Pisharodi
- Language: Tamil
- Pages: 816
- Availability: In Stock
வாழ்க்கைப் பாதை: மலையாளத்தில் எழுதப்பட்ட நவீன தன்வரலாற்று நூல்களின்
வரிசையில் முதன்மையான ஒன்றாகவும் தவிர்க்க இயலாததாகவும் மதிக்கபெறும் நூல்
செறுகாடின் வாழ்க்கைப்பாதை, தனி நபரின்
வாழ்க்கைச் சம்பவங்களைப் பேசும் நூலாகக் கவனம் பெறும் அதே சமயம் ஒரு ஆவணமாகவும்
இந்நூல் சிறப்புப் பெறுகிறது. சமூகத்தின்
அந்தந்தப் பின் புலங்கள் சார்ந்து வாழ்க்கைப் பாதையில் எதிர்கொண்ட
அனுபவங்களையே செறுகாடு சித்தரிக்கிறார். பிறதுறைகளில் அடைந்த புகழை விட தன்
வரலாற்றாளராக இந்த நூல் வாயிலாக எட்டிய கவனம் மேலானது. உண்மையின் ஒளியை
நிழல்திரையால் மூடிவைக்காமலும் மானுட இயல்புகளை மிகையாகப் பரப்புரை செய்யாமலும்
வாழ்க்கைப் பாதையை அமைத்தார் என்பதே மேன்மைக்குக் காரணம்.
நிலவுடைமை மரபும் அதையொட்டிக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சமுதாயப் பழக்கங்களும்
நொறுங்கிக் கொண்டிருந்த காலப்பகுதியில் வாழ்ந்தவர் செறுகாடு வீழ்ந்த சமூகத்தின்
நடுவிலிருந்து புதிய நெறிகள் உருவாகி வருவதைக்கண்ட சாட்சியும் பங்கேற்ற
கடமையாளரும் அவரே.
இருபதாம் நூற்றாண்டின் முதல் அரைப்பாதியில் கேரளச் சமூகம் எப்படி நவீனமானது
என்ற கேள்விகளுக்கான விடைகளும் விளக்கங்களும் வாழ்க்கைப் பாதையில் வரலாற்றின்
வெளிச்சத்தைப் படரச் செய்கின்றன.
செறுகாடு: (1914-1976) செறுகாடு என்ற
கோவிந்த பிஷாரடி ஆசிரியர். எழுத்தாளர், நாடக ஆசிரியர். அரசியல் தொண்டர். சமூகச் செயல்பாட்டாளர் ஆகிய நிலைகளில்
பணிபுரிந்தவர். 1948இல்
மக்கரப்பறம்பு பேரணி வழக்கில் கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை
அனுபவித்தார். நாவல்கள். சிறுகதைகள், நாடகங்கள், சிறுவர்
இலக்கியம் என 45க்கும் மேற்பட்ட
புத்தகங்ளைப் படைத்துள்ளார். 'வாழ்க்கைப்பாதை:
சுயசரிதைக்காக கேரள சாகித்திய அகாதெமி விருதையும் மத்திய சாகித்திய அகாதெமி
விருதையும் பெற்றார்.
நிர்மால்யா: சிற்றிதழ்கள் தொடங்கியவர். இருபத்தைந்து மொழிபெயர்த்துள்ளார்.
இவர் என்னும் வாழ்க்கை வரலாற்று மொழிபெயர்ப்புக்கான 2010இல்பெற்றவர்.
மூலம் மொழியாக்கப் பணியைத் மலையாளப் படைப்புகளைத் தமிழில் எழுதிய மகாத்மா
அய்யன்காளி' நூல் பெரும்
கவனத்தைப் பெற்றது. சாகித்திய அகாதெமி விருதைப்






