Vazhkaiyin Yathaarthangal Ethu Sari Ethu Thavru / வாழ்க்கையின் எதார்த்தங்கள் எது சரி எது தவறு



  • ₹330

  • SKU: KA0008
  • ISBN: 9788184029093
  • Author: Osho
  • Language: Tamil
  • Pages: 288
  • Availability: In Stock

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் தேர்ந் எடுக்க வேண்டிய சூழல் தொடர்ந்துகொண்டே இருக்கும் என்ன செய்வது? எதை செய்யாமல் விட்டுவிடுவது? வாழும் மனிதவர்க்கத்திற்கு ஒவ்வொரு நொடிப்பொழுதும். தேர்ந்தெடுக்கவேண்டிய பொழுதாகபோகிறது. பிரச்சனை என்னவென்றால், நீங்கள் எதை செய்கிறீர்களோ அது தவறானதாகவே கடைசியில் முடிகிறது. நீங்கள் எதை. செய்தாலும் அதற்காக வருந்தி ஆகவேண்டும் இங்கு இருக்கும் இருப்பு, பிளவுபடாதது. பிளவுபடாத ஒருமை என்கிற காரணத்தால் உங்களது அஞ்ஞான மயக்க நிலையில் எதையும் நீங்கள் இரண்டாகப் பிரிக்கிறீர்கள். சரி மற்றும் தவறு. உங்களது இத்தகைய பிரிவினை மனம் போனபோக்கில் இடம்பெறுகிறது. ஆகவே எது சரி எனப்படுகின்றதோ அதை செய்கிறீர்கள். எது தவறு எனப்படுகின்றதோ அதை செய்யாமல் விடுகிறீர்கள். நீங்கள் எதைச் செய்தாலும், உலகத்தில் சரியான இடத்தில் உங்களால் இருக்கவே முடியாது என்றுதான் தோன்றுகிறது! வழியில் நீங்கள் போனாலும் போய் சேர்வது என்னவோ தப்பான புள்ளியாகத்தான் இருக்கிறது. வினோதமாகத் தெரியலாம். ஊழ்வினை என்று நினைக்கத் தோன்றலாம். ஆனால் அனைத்தும் சரியான கணக்கினை சார்ந்தவை. சரியாக கணக்குப் பண்ண வேண்டும். தப்பாக நீடிப்பதால்தான் நீங்கள் எது செய்தாலும் அல்லது எங்குர போனாலும் அது தப்பாகவே முடிகிறது. இப்பொழுது நீங்கள் இருக்கும் நிலையிலிருந்து கொண்டு உங்களால் எதையும் சரியாக செய்யமுடியாது. ஆகவே நான் தரும் அழுத்தம் செயலில் அல்ல! முதலில் சரியாக இருங்கள். முதலில் சரியான உயிர்ப்பில் இருங்கள். பிறகு சரியான செயல் அது பாட்டுக்கு தானாய் வந்து சேரும்.

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up