Theethum Nandrum / தீதும் நன்றும்



  • ₹250

  • SKU: VIJ005
  • ISBN: 8184469004
  • Author: Nanjil Nadan
  • Language: Tamil
  • Pages: 264
  • Availability: In Stock

ஆனந்த விகடன் வார இதழ், 2008-2009 காலகட்டத்தில் 42 கிழமைகள் 'தீதும் நன்றும்' என்ற இந்தத் தொடரை வெளியிட்டனர்.

வெகுசன ஊடகத்தின் மூலம் எனக்குப் பரவலான வாசக கவனம் பெற்றுத் தந்த தொடர் இது இந்தத் தொடர் எழுதிய அனுபவத்தாலும் ஊக்கத்தாலும் பின்னர் குங்குமம் வார இதழில் 49 ரங்கள் கைம்மண் அஏவு' என்ற தொடரும் 'சொல்வனம்' இணைய இதழில் 'பனுவல் போற்றுதும்' என்ற தொடரும் எழுதினேன். தற்போது 'தி இந்து' குழுமத்தின் தமிழ் வார இதழான காமதேனுவின் முதல் இதழில் இருந்து 'பாடுக பாட்டே!' தொடரும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

'தீதும் நன்றும்' தொடர் நிறைந்த பிறகு, விகடன் பிரசுரம் அதனை நூலாக வெளியிட்டது, 2000 ஜூன் மாதத்தில், ஆனந்தவிகடன் வெளியிட்டபோது பயன்படுத்தப்பெற்ற புகைப்படங்கள் நூலிலும் பயன்படுத்தப்பட்டன என்பதோர் சிறப்பு.

அடுத்தடுத்து,விகடன் பிரசுரமே எட்டுப் பதிப்புகள் வெளியிட்டன. விகடன் நிறுவனத்துக்கும் ஆசிரியர் குழுவுக்கும் புகைப்படக் கலைஞர்களுக்கும் ஆதரவளித்த வாசகருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி பாராட்டுகிறேன்.

தற்போது கோவை விஜயா பதிப்பகத்தின் மூலம், 'தீதும் நன்றும் புதிய பதிப்புக காண்கிறது. எந்த வரியும் மாற்றப் பெறவில்லை. ஒரு சொல்லும் நீககவோ சேர்க்கவோ படவும் இல்லை.

வாசகரின் தொடர்ந்த ஆதரவு கோரி வெளியாகிறது. இந்தப் புதிய பதிப்பு

Write a review

Captcha