THABALKAARAN / தபால்காரன்



  • ₹130

  • SKU: NAT018
  • ISBN: 9788194966562
  • Translator: Ka.Na.Subramaniam
  • Author: Roger Martin du Gard
  • Language: Tamil
  • Pages: 112
  • Availability: In Stock

என் காதலர்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காது, ஒப்புக் கொள்ளுகிறேன். ஆண்கள் அப்படி இருக்கிறார்கள். ப்ளமார்ட் கொஞ்சம் வித்தியாசப்பட்டிருப்பதால்தான் எனக்கு அவனைப் பிடித்திருந்தது.

அவனை நான் தூண்டிவிட்டபோதும் கூட அவன் பயந்து ஓடி விடுவானே தவிர நெருங்கிவரமாட்டான். ஏன் வரப் பயப்படுகிறான் என்று எனக்குக் கடைசியில் ஒருநாள் தெரிந்து விட்டது. என் மனத்தில் அது எப்படி என்னைப் பாதித்தது என்று உன்னால் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாது ழாய்னு, முடியாது. அவனைத்தான் கல்யாணம் செய்து கொள்வது என்று அன்றே நான் தீர்மானித்து விட்டேன். அதில் எவ்வளவோ சௌகரியங்கள் உண்டு. அவனைக் கல்யாணம் செய்துகொண்டது பற்றி நான் ஒருநாள்கூட வருத்தப்பட்டது கிடையாது என்று நான் சொன்னால் நீ நம்பலாம். எனக்குப் பணம் பண்ண ஆசை. ஆனால் நான் எது செய்தாலும், என் புருஷனுக்காகத்தான் செய்கிறேன். நான் என் புருஷனை விடப் பன்னிரண்டு வயது பெரியவள். என்றைக்கும் இப்படி என்னால் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்க முடியுமா? சொல்லு. இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் நடக்கும்.

       -நாவலில் இருந்து

Write a review

Captcha