Prandhu / பிராந்து
-
₹150
- SKU: VIJ006
- ISBN: 818446973X
- Author: Nanjil Nadan
- Language: Tamil
- Pages: 192
- Availability: In Stock
சிறுகதைகளின் வரலாறு தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும் காலப்பகுதியில் முன்னேர் அல்லாத. கழுத்தேர் அல்லாத, கடைசி ஏரும் அல்லாத எனது கதைகளும்.
'பிராந்து' எனும் தலைப்பில் இவை பதிவாகின்றன. பிராந்து பிடித்துக் கொண்டிருக்கும் அல்லது ஏற்கனவே பிடித்து விட்டிருக்கும் காலக் குறுக்கு வெட்டை கவலையோடு கவனித்துக் கொண்டிருக்கிறவன் கலைஞன்.
கால் நூற்றாண்டுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருக்கிறேன். தடம் பதித்து விட்டவனா இல்லை தடம் தொலைத்து விட்டவனா என்பது புரிபடுவதில்லை பல சமயம். எல்லாத் தடங்களையும் அழித்துவிட்டுக் காடு செழிக்க வேண்டும் மறுபடியும். நம்பித் தொடர்ந்த தடங்களெல்லாம் தப்பான தடங்களாய்த் தெரிகின்றன தற்போது.
