Araachar / ஆராச்சார்
-
₹750
- SKU: SA0009
- ISBN: 9789355482969
- Translator: M. Senthil Kumar
- Author: K.R.Meera
- Language: Tamil
- Pages: 786
- Availability: In Stock
ஆராச்சார்: மேற்குவங்கத்தில் தூக்குத்தண்டனை நிறைவேற்றும் தொழிலை நூற்றாண்டுகளாக பரம்பரைத் தொழிலாகச் செய்துவரும் ஒரு குடும்பத்தைக் குறித்து எழுதப்பட்ட மலையாளப் புதினம். அக்குடும்பத்தில் ஒருத்தியான இருபத்தியிரண்டு வயது இளம் பெண் சேதனாவின் பார்வையில் கொல்கத்தாவின் வரலாறும் நிகழ்காலமும் ஊடாட, காதலின் தூக்குக்கயிறு இறுக்கி மூச்சுத் திணறும் ஆராச்சார் புதினம் ஒரு காவியமாக விரிகின்றது. விளிம்புநிலைப் பெண் குரலை ஒங்கி ஒலிக்கச் செய்யும் இப்புதினம் ஊடக அரசியல், சமூக அவலங்கள், சாதிக் கோட்பாடுகள், பாலின ஏற்றத்தாழ்வுகள் எனப் பல்வேறு விஷயங்களையும் நுட்பமாக அலசி ஆராய்ந்து வாசகர்களின் முன் வைக்கிறது. இப்புதினத்திற்கு வயலார் விருது, ஓடக்குழல் விருது, கேரள சாகித்திய அகாதெமி விருது, மத்திய சாகித்திய அகாதெமி விருது எனப் பல மதிப்புவாய்ந்த விருதுகள் கிடைத்துள்ளன. கே. ஆர். மீரா : மாறுபட்ட கதைக்களங்களையும் தனித்துவமான மொழியையும் கொண்டு, சமகால மலையாள எழுத்துவலல் தனித்து ஒளிர்பவர் சமூக வரலாறுகளை, விளிம்புநிலைப் பார்வையிலிருந்து மிக எளிதாகக் கதைகளாக்கிலிடும் பேராச்சரியம்; மலையாள எழுத்தின், சமகாலத்தின் புதிய வழித்தடம் கே.ஆர். மீரா. ஒவ்வொரு படைப்பிலும் பெண் குரலை மிக நுட்பமாக நெய்திடும் இவர், தனது இதழியல் பணியைத் துறந்துவிட்டு 2001 முதல் எழுத்துப்பணியில் தீவிரமாக இயங்கி வருகிறார். மோ செந்தில்குமார் : இப்புதினத்தின் மொழிபெயர்ப்பாளர் கோயம்புத்தூர் அரசு சுலைக்கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றிவரும் இவர், தமிழாய்வுச் சிந்தனைக்கு உரைகல்லாக விளங்கக்கூடிய 'பெயல்' ஆய்விதழின் முதன்மை ஆசிரியராகச் செயல்பட்டு வருகிறார். மலையாளச் சிறுகதைகள், கவிதைகள் பலவும் இவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.





