Peyaratra Yathrigan / பெயரற்ற யாத்ரீகன்
-
₹330
- SKU: NV0018
- ISBN: 9788193373666
- Author: Yuvan Chandrasekar
- Language: Tamil
- Pages: 232
- Availability: In Stock
ஜென் கவிதைகள், இறகின்
மிருதுவும் எடையற்ற தன்மையும் கொண்டவை. நிகழும் போது பிடிக்க முடிந்தால் மட்டுமே
பொருள் கொள்பவை. ஆகக் குறைந்த சொற்களில் இதை நிகழ்த்திக் காட்ட இயல்கிறது என்பது,
ஜென் மார்க்கம் செய்யும்
மாயம் என்றே சொல்வேன். மொழியின் தாழ்வாரம் எத்தனை அகலமானது; ஆனாலும் சூட்சுமமானது என்பதையும் ஜென் கவிதைகள்
அறியத் தருகின்றன. இவற்றைப் பற்றுவதற்கு, உணர்வின் ஒரு துளி மட்டுமே போதுமானது. தீவிரமான அல்லது தொடர்ந்த சிந்தனை
இக்கவிதைகளை இன்னும் தொலைவுக்கு நகர்த்திவிட வாய்ப்புண்டு. சொல்லப்போனால், எந்த மொழியிலும், எந்தக் காலகட்டத்திலும் கவிதையின் ஆதார குணம்
என்று இதைச் சொல்லலாம்.













