Thaandu / தாண்டு



  • ₹520

  • SKU: SA0029
  • ISBN: 9789390310388
  • Translator: Seshanarayana
  • Author: S.L.Bhyrappa's
  • Language: Tamil
  • Pages: 660
  • Availability: In Stock

'தாட்டு' என்னும் சாகித்திய அகாதெமி விருது பெற்ற கன்னட நாவல், சாதிக் கொடுமைகளை இதிகாச, புராணங்கள் மற்றும் தத்துவப் பார்வையில் சித்தரிக்கிறது. தற்கால வாழ்க்கையில் அது எவ்விதமான வடிவத்தைப் பிரதிபலிக்கிறது என்பதை விளக்குவதே இந்நாவலின் சிறப்பு. இந்நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பே 'தாண்டு',

 

நாவலின் மிகவிரிந்த பரப்பையும், மனதைக் கவரும் கதாபாத்திரங்களையும் திறம்படக் காட்டும் முயற்சியில், ஆழமான கருத்துக்களை வெளிக்காட்டும் நாவலாசிரியரின் திறமையைச் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது.

 

எஸ். எல். பைரப்பா புகழ்பெற்ற கன்னட நாவலாசிரியர். அவருடைய 'பருவம்', 'வம்ச விருட்சம்' முதலிய நாவல்கள் தலைசிறந்தவை. பிற மொழிகளில் அவருடைய நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டதைப்போல் வேறு எந்த கன்னட நாவலாசிரியரின் எழுத்துகளும் மொழிபெயர்க்கப்படவில்லை. சாகித்திய அகாதெமி விருது, ஸரஸ்வதி ஸம்மான், பத்மஸ்ரீ முதலிய பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள பைரப்பா, கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

 

சேஷநாராயணா, தமிழிலிருந்து கன்னடத்திற்கு இதுவரை 10 நாவல்களை மொழியாக்கம் செய்துள்ளார். அசோகமித்திரனின் '18வது அட்சக்கோடு' நாவலின் கன்னட மொழிபெயர்ப்புக்குச் சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்புப் பரிசு பெற்றவர். 'பார்த்திபன் கனவு', 'அகல் விளக்கு', 'ஒரு கடலோர கிராமத்தின் கதை', 'தென்பாண்டிச் சிங்கம்' போன்ற நாவல்களைக் கன்னடத்தில் மொழிபெயர்த்துள்ளார். 'மாஸ்தி சிறுகதைகள்' என்னும் கன்னடச் சிறுகதைத் தொகுப்பையும் தமிழாக்கம் செய்துள்ளார். இவர், தமிழக அரசின் 'குறள்பீட விருது' பெற்றவர்.

 

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up